வெளியானது விவேகம் டீசர்.. அதிர்ச்சியில் அஜித் படக்குழு

0 31

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் படம் டீசர் சற்று முன்னதாக யுடியூப்பில் வெளியானது.‛வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள, விவேகம் திரைப்படத்தின் டீசர், மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதத்தில் இன்று (மே 11) முதல் மணித்துளியில் விவேகம் படம் டீசர் வெளியானது. பிட் லுக்கில் அஜித் இருக்கும் ஒவ்வொரு சீனும், பட பட பட்டாசு ரகம். வேற லெவலில் இருக்கும் விவேகம் டீசர், படத்தை பார்க்கும் ஆவலை எகிற வைக்கிறது. அதிகாரப்பூர்வமாக டீசர் வெளியாகும் முன்பே சமூக வளைதளங்களில் டீசர் லீக்கானது.டீசரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்https://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc&feature=youtu.be
வாட்ஸ் அப்பில் விவேகம் டீசர்
அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக விவேகம் டீசருக்காக இன்று இரவு விழித்திருந்தனர்.

12 மணிக்கு வரவிருந்த டீசருக்கு கவுண்ட்டவுன் வீடியோ எல்லாம் ரிலீஸ் செய்திருந்தனர். ஆனால் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வாட்ஸ்அப்பில் லீக்காகி விட்டது.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கோபமாகிவிட்டனர். இந்த செயலை யார் செய்தது என்ற குழப்பத்தில் படக்குழு ஆழ்ந்துள்ளது.

எனினும் ரசிகர்கள் ஆவலை திருப்திபடுத்தும் விதமாக டீசர் மிகவும் அசத்தலாக வந்துள்ளது. டீசர் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

              

கபாலி சாதனையை முறியடித்த விவேகம் 

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அஜித்தின் விவேகம் டீசர் வெளியானது. 

சிவா இயக்கத்தில் ஹாலிவுட் தரத்தில் வெளியான இந்த டீசரின் Views இன்னும் முழுதாக Update ஆகவில்லை. ஆனால் லைக்ஸில் சாதனை படைத்து வருகிறது.

50 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை கடந்து கபாலியின் ஒரு மணி நேர 30 நிமிட சாதனையை முறியடித்துள்ளது.

                 

Leave A Reply

Your email address will not be published.