திருச்சியில் கள்ள நோட்டு கலாச்சாரம் – அச்சடித்து புழகத்தில் விட்ட தம்பதி கைது

0 79

புதுக்கோட்டையில் மாவட்டம் கீரனூர் பகுதியில் நேற்று மாலை பழங்கள் வாங்கி கொண்டு 500 ரூபாய் கொடுத்து சில்லரை பெற்று சென்ற தன்பதியினர் அதே கடைவீதியில் பேன்சி ஸ்டோரில் பொருட்கள் வாங்கி கொண்டு 500 ரூபாயை கொடுத்துள்ளனர். அந்த நோட்டு ஜெராக்ஸ் போன்று உள்ளதாக கூறி அவர்களிடம் வேறு நோட்டு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வேறு நோட்டு கொடுக்காமல் அங்கிருந்து வேனில் தப்பி திருச்சி புறப்பட்டுள்ளனர். இதுக்குறித்து பேன்சி கடை உரிமையாளர் குரல் கொடுத்ததையடுத்து அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் அவர்களை பின் தொடர்ந்து மடக்கி பிடித்து கீரனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த அப்துல்சுக்குர் (41). அவரது மனைவி ஹசீனா பானு(32) வேன் ஓட்டுநல் சையது.(55) என்பது தெரியவந்தது. கள்ளநோட்டுகளை திருச்சியில் புழக்கத்தில் விட்டால் மாட்டிகொள்வோம் என்பதால் மற்ற ஊர்களில் புழக்கத்தில் விட ஆரம்பித்துள்ளதாகவும், குறிப்பாக கிராம புறங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொண்டிருந்தோம். அப்படி கீரனூரில் மாற்றி கொண்டிருந்த போது தான் தாங்கள் மாற்றி கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பழங்கள், பேன்சி பொருட்கள், 16ஆயிரத்து 900 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலக்கரை எம்.எம்.தெருவில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய பிரிண்டர், கணிணி, மற்றும் கலர் ஜெராக்ஸ் இயந்திரம், 2ஆயிரம் 500 ரூபாய் நோட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.