நடிகர் ரஜினியின் புதிய படம் காலா என்கிற கரிகாலன் !

0 18

நடிகர் ரஜினியின் புதிய திரைப்படத்திற்கு காலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகமான ‘2.0’ திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் முடிந்துவிட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில், ரஜினியின் 164-வது படமான ‘காலா` தலைப்பை இன்று காலை அதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.