என்னை கொன்னுடுவான் நினைச்சு ! என் மகனை நானே கொன்றேன் ! கொலைகாரியான தாய்

0 38

“எங்களை கொன்று விடுவான் என நினைத்து, முகத்தில் திராவகம் வீசி கத்தியால் வெட்டி மகனை கொன்றோம்“ என கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பாறசாலை கொடவிளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். அவருடைய மனைவி சரசுவதி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது 22), சஜின் (21) என்ற 2 மகன்கள்.

சந்தோஷ் பாறசாலை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், நண்பர்களுடன் சேர்ந்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் தம்பியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

தகராறின் போது பெற்றோரை அவர் அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் தன்னுடைய பெற்றோர் மற்றும் தம்பியை கத்தியால் வெட்ட முயன்றதாகவும், கொலை வெறி தாக்குதலில் தப்பிப்பதற்காக 3 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடியதாகவும் தெரிகிறது.

 

இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் மறுநாள் காலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சந்தோசின் சகோதரர் சஜின், தாயார் சரசுவதி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

சரசுவதியிடம் நடத்தி விசாரணையில் அவரும், அவருடைய கணவர் ஸ்ரீதரனும் சேர்ந்து மகன் சந்தோசை கொன்றதாக தெரியவந்தது. இதுதொடர்பாக சரசுவதியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் கொலைக்கான பின்னணி என்ன? என்று தெரியவந்தது. வாக்குமூலம் விவரம் வருமாறு:-

 

கடந்த ஒரு வருடமாக எனது மகன் சந்தோஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானான். தவறான நண்பர்களின் சகவாசத்தால் நாளுக்கு நாள் அவனது தொல்லை அதிகரித்தது. கஞ்சா போதையில் சந்தோஷ் இருந்ததால், பெற்றோர், தம்பி என்பதை மறந்து கண்மூடித்தனமாக எங்களை அடித்து உதைத்தான்.

 

திருத்த முயன்றேன்

 

மகனின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி மனம் வருந்தினேன். எப்படியாவது திருத்தி விட முடியாதா? என்று முயற்சி செய்தேன். ஆனால் அந்த எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் சந்தோஷின் நடத்தை இருந்தது. இதனால் அவன் மீது ஒரு கட்டத்தில் வெறுப்பு ஏற்பட்டது.

 

ஒரு கட்டத்தில் எங்களை சந்தோஷ் கொன்று விடுவான் என நினைத்தோம். எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற மகன் என்றும் பாராமல் மகனை கொல்ல நானும், என் கணவர் ஸ்ரீதரனும் முடிவு செய்தோம்.

 

3 முறை தப்பினான்

 

ஏற்கனவே 3 முறை சந்தோசை கொல்ல முயற்சித்தோம். ஆனால் தப்பிவிட்டான். இந்தநிலையில் சம்பவத்தன்று சந்தோஷ், கொலைவெறியோடு எங்களை வெட்டுக்கத்தியால் விரட்டினான். நாங்கள் அவனிடமிருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டோம்.

 

அன்றைய தினம் இரவு சந்தோஷ் கஞ்சா போதையில் நிதானமில்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது நானும் எனது கணவரும் வீட்டுக்கு சென்றோம். அவனது இரு கால்களை துணியால் இறுக்க கட்டி, அவனது முகத்தில் திராவகத்தை வீசினோம். அவன் வலியால் அலறினான். பின்னர் கத்தியால் பின்பக்க தலையில் வெட்டி கொன்றோம்.

 

இவ்வாறு வாக்குமூலத்தில் சரசுவதி கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

மேலும் இந்த கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஸ்ரீதரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.