மாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு?

0 32

மாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு?
—————————————————————————————-
நியூட்டன் அறிவியல் மன்றம்
===================================================
1) மாணவி அனிதாவுக்கு பொறியியல் கலந்தாய்வில்
ஏரோனாட்டிகல் இஞ்சினீரிங் பாடப்பிரிவில் இடம்
கிடைத்தது. மேலும் BVSc என்னும் கால்நடை மருத்துவர்
படிப்பிலும் இடம் கிடைத்தது.

2) என்றாலும் இந்த ஆண்டு MBBS கிடைக்க வாய்ப்பில்லை
என்பதால் சோகமான முடிவை எடுத்து விட்டார்.

3) மாணவி அனிதா நீட் தேர்வை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் என்று
ஊடகங்கள் கூறுகின்றன.

4) மாணவி அனிதா தன் சொந்த முயற்சியில் இந்த
வழக்கைத் தொடுக்கவில்லை. குடும்பத்தோடு
டெல்லிக்கு விமானத்தில் செல்வது, விமானத்தில்
திரும்புவது, டெல்லியில் விடுதி எடுத்துத் தங்குவது,
வழக்குச் செலவை ஏற்பது, லட்சக் கணக்கில் கட்டணம்
கேட்கும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருக்கு
பணம் கொடுப்பது ஆகிய இவையெல்லாம் மாணவி
அனிதாவால் முடியாதது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த
கூலித் தொழிலாளியின் மகளான அனிதாவால்
இந்தச் செலவெல்லாம் கற்பனையில் கூட நினைத்துப்
பார்க்க முடியாது.

5) அப்படியானால் பல லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும்
இந்த முயற்சியை, மாணவி அனிதாவை ஒரு
பகடைக்காயாகப் பயன்படுத்தி, மேற்கொண்டது யார்?

6) வேறு யாருமல்ல. அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.

7) ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள, அதே
நேரத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த, பட்டியல்
இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அல்லது மாணவியை
அரசு தன்னிடம் உள்ள நீட் ரேங்க் பட்டியலில் இருந்து
அறிந்து கொண்டு, மாணவி அனிதாவை வழக்குத்
தொடர்வதற்கு ஏற்ற ஆளாக அமைச்சருக்கு வேண்டிய
அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

8) தலமட்ட அதிமுகவினர் மூலமாக, மாணவி அனிதாவின்
பெற்றோரை சம்மதிக்க வைத்து, வழக்குத் தொடர்வதாக
ஊடகங்களில் அறிவித்தனர். மாணவியின் குடும்பத்தை
டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

9) ஆனால் மூத்த வழக்கறிஞர் திரு மணிகண்டன்
வதன் அவர்கள் (Manikandan Vathan) அனிதாவின் பெயரில்
உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கும் தொடுக்கப்படவில்லை
என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். இதில் உண்மை
என்ன என்று ஆராய்ந்து அறிய வேண்டும்.

10) தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக, அப்பாவி
மாணவி அனிதாவைப் பயன்படுத்தியர்கள்,
வழக்கு தோல்வி அடைந்ததுமே மாணவிக்கு
மனநல ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் அதைச் செய்யத் தவறினர். இதன் விளைவு
மாணவி இறந்து போனார். இது தற்கொலைதான்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.

11) இந்த விஷயத்தில் ஒரு CBI விசாரணை தேவை.
அ) மாணவி உண்மையிலே வழக்குத் தொடுத்தாரா,
இல்லையா?

ஆ) நளினி சிதம்பரத்திற்கு எதிராக மாணவி அனிதாவை
நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தவர் யார்?

இ) உண்மையிலேயே மாணவி அனிதா விரக்தி
அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா?
இக்கேள்விகளுக்கு விடை தெரிய ஓர் பாரபட்சமற்ற
விசாரணை தேவை.

12) நீட் அல்ல, நீட் அரசியலே மாணவியைக் கொன்று
விட்டது.ஆம், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் (720க்கு 87)
எடுத்து தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை
செய்து கொள்ளவில்லை. மாறாக, நீட் தேர்வை
முன்வைத்து பலரும் ஆடிய சதுரங்க அரசியலே
மாணவியைக் கொன்று விட்டது.
**********************

Leave A Reply

Your email address will not be published.