ஜோ என்ன ஆச்சு உங்களுக்கு?

0 45
சிவக்குமார் குடும்பத்தில் சர்ச்சையை உண்டாக்கிய ஜோதிகா… 
பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தினுடைய டீசர் கடந்த நவம்பர் 15-ம் தேதி வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தையானது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
திரையுலகில் தங்களுக்கு என ஒரு நல்ல பெயரை கொண்டிருக்கிறது நடிகர் சிவக்குமார் குடும்பம். ‘ராமாயணம், மகாபாரதம் என ஆன்மீக சொற்பொழிவு நடத்தும் சிவக்குமாரின் மருமகள், இப்படி பச்சையான கெட்டவார்த்தை பேசுவது போன்ற காட்சியிலா நடிப்பது’ என சமூக வளைத்தளங்களில் பெருத்த விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.
ஏற்கனவே, பிரபலமான தமிழ் சேனலின் நாடகம் ஒன்றில் நடிக்க ஜோதிகா கமிட்டானதிலிருந்து சூர்யா குடும்பத்தில் சச்சரவு தலைதூக்க ஆரம்பித்தது. இப்படியிருக்க, பாலா படத்தில் பச்சையாக வசனம் பேசியிருப்பது, மேலும் சிவக்குமார் குடும்பத்திற்கு தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
திரைப்படத்தில் பேசும் வசனம் தான் என சொன்னாலும், பார்க்கும் ரசிகனால் இதனை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை. திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்த ஜோதிகா, சூர்யாவின் 2டி கம்பெனி தயாரிப்பில் மட்டும் செலக்டிவ்வாக, பெண்கள் சார்ந்த கதையம்சம் உள்ள படத்தில் நடித்துவந்தார். ஆனால், சமீப காலமாக சீரியல், சினிமா என சூர்யாவிடம் எதுவும் கலந்துகொள்ளாமல் ஜோதிகா நடந்துகொள்வது குடும்பத்துக்குள்ளேயே புகைந்து வந்தது. அது இப்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
ஜோ என்ன ஆச்சு உங்களுக்கு?
நவீன் இளங்கோவன்

Leave A Reply

Your email address will not be published.