திருச்சியின் ரப்பர் மனிதன் – அசத்தும் மாணவன் !

0 125

நண்பர்களின் கேலி பேச்சு தான் எனக்கு கிடைத்த டானிக்  

திருச்சி மாவட்டம் துறையூரை  அடுத்துள்ள டி.களத்தூர் பகுதியை சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (18). டிப்ளமோ படிக்கிறார். இவா் தன்னுடைய உடம்பை ரப்பா் போன்று முருக்கி, சுறுக்கி பின்னி பிணைந்து சாகசம் செய்யும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்தி வைத்துள்ளார்.

இது பற்றி நம்மிடம்…. 

என்னோட 2 ஆம் வகுப்பு படிக்கும்  போதே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடும் சாகச நிகழ்ச்சிகளை  தொடர்ந்து பார்த்ததால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் ஆங்கில சேனல்களில் தனிநபா் செய்யும் சாகச காட்சிகளை பார்த்து அதை மிகுந்த பாதுகாப்புடன் முயற்சி செய்தேன். . நாளுக்கு நாள் இந்த முயற்சி எனக்குள் ஒரு ஊக்குவிப்பை கொடுத்தது. இதனை தற்போது உடற்பயிற்சி போன்றும் செய்கிறேன்.

தன்னுடைய உடம்பில் உள்ள உறுப்புகளை தனிதனியாக வளைத்து காட்டுவேன், அதிலும் உடலை ரப்பா் போன்று 20 க்கும் அதிகமான வடிவில் வளைத்து காட்டுவேன்.  பொதுவாக இந்த உடலை வளைத்து சாகசம் செய்தும் எனக்கு எந்த ஆசிரியரும் கிடையாது.

ஒவ்வொரு செயல்களுக்கும் சுமார் 1 மாத காலம் கால அவகசாம் தேவை அதிலும் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் தொடர் பயிற்சி செய்து வருகிறேன். இந்த பயிற்சி நேரத்தில் எந்த
ஆகாரமோ, உணவோ சாப்பிட கூடாது.

மேலும் உடலை வளைப்பது மட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட யோக வகைகளை நன்கு கற்று கொண்டேன். போதிய பொருளாதார பின்னனி இல்லாததால் என்னால் முடிந்த அளவிற்க்கு புத்தகங்களையும், வீடியோ காட்சிகளையும் பார்த்து அடிப்படையில் இருந்தே யோகா கற்று கொண்டேன்.

என்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியா் அசோக் சக்கரவா்த்தி தான் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். ஆனால் . பல நண்பா்கள் என்னை கேலி செய்ததும் உண்டு. அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களின் கேலிகளை எனக்கு கிடைத்த பரிசாக நினைத்துக்கொண்டு   நான் பல பள்ளிகள், கல்லூரிகளில் இந்த கலையை செய்து காண்பித்துள்ளேன்.  பல பரிசுகள் பெற்றுள்ளேன். இதை சாதாரணமாக நான் கற்றுகொள்ளவில்லை பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டேன். தசை பிடிப்பு, மூட்டு நலுவுதல், போன்ற பல வலிகளுடன் இதை நான் கற்று கொண்டேன். தொடர்ந்து நான் புதிய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறேன். நானும் ஒரு நாள் மிகசிறந்த சாகசவீரராக இந்த சமூகத்தில் வலம் வருவேன் என்றார்.

செய்தியாளர் – ஜே.கே.

பிருத்திவிராஜ் – 7548852440

Leave A Reply

Your email address will not be published.