நீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் ! 

0 40

நீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் !

 

நீட்தேர்வு சமூகநீதிக்குஎதிரானது, மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே கல்வி இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் ஒருபுறமும், நீட்தேர்வு வரும் வரையில் தேர்வு நடக்குமா நடக்காதா என அனைத்து ப்ளஸ்2 மாணவர்கள் ஒருபுறமும்தொடர்ந்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்திக் கொண்டிருந்தனர்.

இவையனைத்தையும் மீறி கடந்த ஆண்டு தமிழகத்திற்குள் நுழைந்தது நீட்தேர்வு. இதன் விளைவாக மாநில பாடத்திட்டத்தில் படித்த அனைத்து மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

 

பலர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெறாததால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை இழந்தனர். இதனால், மனமுடைந்து போன அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருந்த போதிலும், நீட் தேர்வுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, இவ்வாண்டின் நீட் தேர்விற்கான நுழைவுத் தேர்வு மே 6 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதே பல மாணவர்கள் தூக்கத்தை மறந்து படிக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு வரமா? சாபமா? என்பது குறித்த ஒரு அலசல் ரிப்போர்ட்.

 

நீட்தேர்வு

 

பல ஆண்டுகளாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(All India Pre Medical Test(AIPMT))என நடத்தப்பட்டு வந்த இத்தேர்வானது, இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வாக(National Eligibility cum Entrance Test(NEET)) மாற்றப்பட்டது. இதற்கு முன் இந்தியாவிற்குள் இருக்கும் மாணவர்கள் மட்டுமே போட்டியிட்ட இத்தேர்வுக்கு, தற்போது உலக மாணவர்களும் சேர்ந்து போட்டியிடும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

மருத்துவம், பல் மருத்துவம், ஓமியோபதி துறையில் சேர்வதற்கான அனைத்திற்கும் நீட்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கு தமிழ் உட்பட இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.

 

தமிழகத்தின் பின்னடைவு

 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டும் அல்ல ஆசிரியர்களுக்குமே புதியது. மாநிலப் பாடத்திட்டம் மட்டும தெரிந்த ஆசிரியர்களுக்கு, திடீரென சிபிஎஸ்சி பாடப்பிரிவில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்னும் போது முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அரசு பள்ளிகளைப் பொறுத்த வரையில், தற்போதுதான் 11ம்வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக வருபவர்கள் அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் வருகின்றனர்.

 

ஆனால், நீண்ட நாட்களாக பணியாற்றக் கூடிய 45 முதல் 50 வயதிற்கு மேல் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் அரசு வேலைவாய்ப்புத் துறையில் சீனியாரிட்டி முறையில் வந்தவர்களே. அவர்களுக்கு பாடத்திட்டமே புதிதாக தெரிவது இயல்பே. அவர்களது பாடத்திலேயே அடிப்படை திறன் குறைவாக கொண்டவர்களே தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

 

11ம்வகுப்பு, 12ம் வகுப்பு படத்திட்டத்தைக் கையாளுவதற்கு பிஎச்டி முடித்தவர்கள்தான் கையாள முடியும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளாவது நீட் தேர்வுபயிற்சியில் அனுபவம் கிடைத்தால் மட்டும்தான் அவர்களால் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்க முடியும்.

 

தமிழில் இல்லாத நீட் புத்தகம்

 

நீட்தேர்வை பொறுத்த வரையில் ஆங்கிலத்தில் எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன. பிராந்திய மொழிகளில் அவ்வாறாக இல்லை. தமிழிலும் அதேநிலைதான் நீடிக்கிறது. இன்றைக்கு தமிழிலில் இருக்கும் பெரும்பாலான நீட் புத்தகங்கள் தனியார் பயிற்சி மையத்தினால் மறுஆக்கம் செய்யக்கூடியவையே. 10 பிராந்திய மொழிகளில் நீட் தேர்வை நடத்தக் கூடிய அரசு அந்தந்த மொழிகளில் புத்தகம் கொடுக்காமல் இருப்பது, தனியார் பயிற்சி மையத்திற்கு மிகவும் சாதகமாகவும், அதன் மூலம் கொள்ளை அடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

 

தனியார் பள்ளிகளின் நீட் கோச்சிங்

 

நீட் தேர்வு வந்ததிற்கு பிறகு, தனியார் மருத்துவக் கல்லூரிகளும், மாணவர்களும் எவ்வளவு வேதனைக்குள்ளானார்களோ, அந்த தனியார் பள்ளிகள் அதை சாதகமாக்கிகொண்டனர். நீட் தேர்விற்கு முன்பு 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பை எடுத்த பள்ளிகள்.

 

தற்போது, பள்ளி நாட்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் தனியார் பயிற்சியாளர்களை வைத்து 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் இருமுறை வகுப்புகளை எடுக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் ரூ.30ஆயிரம் வசூலிக்கப் படுகின்றது.

 

இதற்கான பயிற்சி ஜூன் முதல் ஜனவரி வரையில் நடைபெறுகிறது. இன்னும் சில பள்ளிகளில் பொதுத் தேர்வு முடிந்த உடன் கோடை பயிற்சி பள்ளியாக நீட் தேர்வுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். அதில், தங்கும் வசதி முதற்கொண்டு அனைத்திற்கும் ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. அதற்காக, ஒரு பெரும் தொகை பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 10,000 மாணவர்களில் 1,000 பேரை நீட்டில் தேர்ச்சி பெற வைத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

 

நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமா?

 

பெரும்பாலான பெற்றோர்களின் மனநிலை நீட் தேர்வில் வெற்றி பெற்றால் போதும் மருத்துவபடிப்பு சேர்ந்து விடலாம் என்ற நினைக்கின்றனர். ஆனால், 720 மதிபெண்களுக்கு நடைபெறும் நீட் தேர்வில் 120 பெற்றாலே போதும். ஆனால், கட்ஆப் என்பது வருடா வருடம் மாற்றத்திற்குரியதாகவே இருக்கிறது. கடந்த வருட நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ படிப்பை கோட்டை விட்டவர்களே, அவர்களில் பெரும்பாலானோர் வேறு எந்த படிப்பையும் படிக்காமல் முழு நேரமும் நீட் தேர்விற்காக மட்டுமே படித்து கொண்டிருக்கின்றனர் என்பதே நிதர்சமான உண்மை. அந்த வகையில், இந்த ஆண்டு நிச்சயம் கட்ஆப் மதிப்பெண் உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தமிழகத்தைப் பொறுத்த வரையில், 12ம் வகுப்புமதிப்பெண் மற்றும் நீட்தேர்வின் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே நீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குவியும்தனியார்நீட்பயிற்சிமையம்

 

தமிழகத்திற்கு நீட் தேர்வு வருவதற்கு முன்னதாக அனைத்து போட்டித் தேர்வுகளில் ஒன்றாக எடுக்கப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வு, தற்போது, முழு நேர நீட் கோச்சிங் வகுப்புகளாகவே மாறிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்விற்கான புத்தங்களை பெரும்பாலும் இதுபோன்ற பயிற்சி பள்ளிகளிலே வடிவமைக்கின்றனர். இதற்காக, தமிழ் வழிக்கல்வி பயில்வோருக்கு, ரூ.40 ஆயிரம் வரையிலும், ஆங்கில வழிக்கல்வி பயில்வோருக்கு ரூ.30ஆயிரம் வரையிலும் வசூலிப்படுகிறது. இவர்களின் நோக்கமும் நீட்டில் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதில் மட்டுமே உள்ளது.

 

அந்த வகையில் எளிதில் நீட் தேர்வில் மாணவன் வெற்றி பெற்றால் போதும் என்ற நோக்குடன் தேர்ச்சி பெறும் அளவிற்கு மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக தாவரவியல், விலங்கியல் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறை குறித்தோ, சூத்திரத்தை வைத்து போடக்கூடிய கணக்குகள் குறித்து குறைவாக சொல்லிக் கொடுக்கின்றனர், தியரி மட்டுமே அங்கு அதிகம்.நடப்படுகிறது.

 

நீட்தேர்வின்நேரத்தைஇவைஅதிகமாகஎடுத்துகொள்ளும்என்பதும்ஒருகாரணமாகசொல்லப்படுகிறது.ஏனெனில், தேர்ச்சி மதிப்பெண்ணை மையப்படுத்தி மட்டுமே அவர்களின் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் இருக்குமே தவிர எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள் என்பதில் அல்ல.

 

பாடத்திட்ட வரையறை

 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தினை வரையறுத்து புத்தகம் போடுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கும் போதிலும் அவர்களுக்கான ஆலோசனையும், பயிற்சியும் முறையாக அளிக்கப்படாமல் இருப்பதே இதன் குறையாகும். கடந்த ஆண்டை பொறுத்த வரையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண் 130ஆகவும், மற்றவர்களுக்கு 145ஆகவும் இருந்தது. நீட் தேர்விற்கு தாவரவியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 

இதுகுறித்து பேராசிரியர் வீ.ரமேஷ் கூறியதாவது,

 

அதிகமான தனியார் பள்ளிகளிலும் பவுன்டேசன்கிளாஸ் (Foundation Class) என்பது அடிப்படையாக பயிற்று விக்கப்படுகிறது. அதை அவர்கள் 6ம்வகுப்புமுதலேபடிக்கத்தொடங்கிவிடுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு அறிவியல் சார்ந்த அறிவுத்திறன் அதிகரிக்கிறது.

 

இதற்காக, மற்ற மாநிலங்களில் இருந்து அதிக ஆசிரியர்கள் வர வழைக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் எம்.எஸ்.சி, பி.இ பற்றி நன்கு பயிற்சி பெற்றவர் உள்ளனர். இதனால், அவர்களால் அனைத்து வித போட்டித்தேர்வுகளிலும் சிறப்பாக செயலாற்ற முடிகிறது. மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் 10ம்வகுப்புமுடித்தவுடன் 11, 12ம்வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் இருபுத்தகம் அதுவும் விளக்கமாகஉள்ளதை பார்த்தே பயப்படத்தொடங்கி விடுகின்றனர். இவையனைத்தையும் மீறி அவர்கள் நீட்தேர்வில் வெல்வது என்பது  மிகவும் கடினமாக உள்ளது.

 

இருப்பினும், எப்படியாவது தேர்வில் வெற்றி பெறவைக்க வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைப்பதினால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் வருகிறது. அதன் விளைவாக ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்குள்ளே வெருக்கும் மணப்பான்மை தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது.

 

இங்குமுதலில்அடிப்படையைசரிசெய்யவேண்டும். பாடத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். பின்னர் அதை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பின்பே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

 

இது போன்ற இடர்பாடுகளினால் தான் ஐ.ஐ.டியில் 10 சதவீதம்கூடமாநிலப்பாடத் திட்டத்தில் படித்தமாணவர்கள் இருப்பதில்லை.

 

கடந்த  வருட நீட்டில்முதல் 25 இடத்தில் ஒருவர் கூட தமிழகத்தை ச்சார்ந்தவர்கள் இல்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில் நீட்தேர்வில்தேர்ச்சிபெற்றாலேபோதும் என்று  நினைக்கின்றனர்.

 

அது தவறு அதிலும் கட்டாப் மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இல் 11ம் வகுப்பின் தொடர்ச்சி 12ம் வகுப்பில் உள்ளது. நமது மாநில பாடத்திட்டத்தில் அவ்வாறு இல்லை, 11ம் வகுப்பின் விரிவாக்கமே 12ம் வகுப்பில் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

 

நீட் தேர்வும் கருப்பு பணமும்…..

 

நீட் தேர்வுக்கு முன்னால், தனியார் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நீட் மாதிரி தேர்வு நடத்தி, அதில் இலட்ச இலட்சமாய்ப் பணத்தைக் கொடுத்து மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்து, அவர்களைத் தனியார் கல்லூரிகளில் சேர்த்து வந்த தனியார் கல்லூரி முதலாளிகளை, அந்தச் சிரமத்திலிருந்து விடுவித்திருக்கிறது, நீட் தேர்வு. தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையில் நடத்தும் மோசடிகளுக்கு ஒரு சட்டபூர்வ தகுதியை, பாதுகாப்பை கொடுத்துள்ளது.

 

போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறைவாகவும் உள்ளதால், முதலாளித்துவ “சந்தை” விதி மருத்துவ இடங்களின் ரேட்டை எகிற வைத்துவிட்டது.

 

“கடந்த ஆண்டு 10 இலட்ச ரூபாயாக இருந்த எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் ஆண்டு கல்விக் கட்டணம் நீட் தேர்வுக்குப் பிறகு 21 இலட்சமாகவும்; ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 15 இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளதென்றும், இதற்கு அப்பால், ஒரு இலட்ச ரூபாய் முதல் மூன்று இலட்ச ரூபாய் வரை பிற கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்; இவற்றுக்கும் மேலே ஒவ்வொரு கல்லூரியும் தனது தரத்திற்கு ஏற்ப 40 இலட்ச ரூபாய் முதல் 85 இலட்ச ரூபாய் வரையிலும் நன்கொடை

வசூலிப்பதாகவும்” டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

இதன்படி பார்த்தால், மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருக்கும் மாணவர்கள், அத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் என்பதைவிட, கல்லூரியில் நுழைவதற்கு அவர்களது பெற்றோர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை பணமிருக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.

 

மேலும், 26,500 இடங்களைத் தமது பிடியில் வைத்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், அந்த இடங்களில் ஒரு சில நூறு இடங்களை அரசியல்வாதிகளுக்கும், அதிகார மொய் வைப்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால்கூட, போட்டியிடும் ஏழை பெற்றோர்களிடம் ஆசையை தூண்டி அவர்களிடம் கறக்கவுள்ள நன்கொடை மூலம் இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் சேருவதற்கான வாய்ப்பை நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.