எடப்பாடியை காப்பது ரஜினி தான்

0 50

எடப்பாடியை காப்பது ரஜினி தான்

 

 

டெல்லியில் உள்ள பிஜேபியின் முக்கியப் பிரமுகர் மூலமாக ரஜினியிடம் பேசியிருக்கிறார்கள். ‘பாஜக நினைப்பதைதான் நீங்க பேசிட்டு இருக்கீங்க. நீங்க சொல்ற ஆன்மிக அரசியல்தானே பிஜேபியின் நோக்கம். அதனால் தமிழ்நாட்டில் நாம இணைந்து களத்தில் இறங்கலாம்.
நீங்க உங்க விருப்பபடி கட்சி ஆரம்பிங்க. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் தேர்தல் கொண்டுவரோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம். அதுவரை எதுவும் பேச வேண்டாம். தேர்தல் செலவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதை நாங்க பார்த்துக்குறோம். கூட்டணி பற்றி மட்டும் யோசிச்சு சொல்லுங்க…’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
ரஜினி அமெரிக்கா போன சமயத்தில் இது சம்பந்தமாக அவருக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ரஜினியிடம் பேசிய அவரது நண்பர்கள், ‘பிஜேபியுடன் கூட்டணி வைப்பது என்பது சரியாக இருக்காது. இன்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க பிஜேபி எதிர்ப்பு அலை வீசுது. மக்கள் கடுமையான அதிருப்தில இருக்காங்க. இப்போ பிஜேபியுடன் கூட்டணி என்று நினைப்பதே தப்பு. கல்லை கட்டிகிட்டு கிணத்துல குதிக்கிற மாதிரி ஆகிடும். இவங்க யாரும் வேண்டாம் என்பதால்தான் மக்கள் உங்களை எதிர்பார்த்து இருக்காங்க.
ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை சம்பாதிச்சு வைத்து இருக்கும் ஒரு கட்சியோடு கூட்டணி வேண்டாம். அதுல தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கலாம். அப்போதான் நாம அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். இல்லைன்னா முதல் அடியிலேயே நாம சறுக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்…’ என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
ரஜினியும் நண்பர்கள் சொன்னதை யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். பிஜேபி தரப்பிலிருந்து தொடர்ந்து ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.
ஆனால் ரஜினி இன்னும் பிடிகொடுக்கவில்லை. ரஜினி பிடிகொடுக்காமலேயே இருப்பது பிஜேபியின் மேலிடத் தலைவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
அவர்களோ, ‘ரஜினி கூட்டணிக்கு ஓகே சொன்னால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துத் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையும் நடத்தலாம். இல்லை என்றால் தமிழ்நாட்டுக்கு இப்போ எலெக்‌ஷன் அவசியம் இல்லை…’ என்று சொன்னார்களாம்.
ரஜினி இப்போது இருக்கும் மனநிலையில் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் எடப்பாடி ஆட்சிக்கு இப்போதைக்கு மோடியால் ஆபத்து இல்லை என்பதால் எடப்பாடியைக் காப்பாற்றுவது ரஜினி என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Leave A Reply

Your email address will not be published.