இன்னும் எத்தனை தோட்டாக்கள் வைத்திருக்கிறாய் எடப்பாடி?

0 65

இன்னும் எத்தனை தோட்டாக்கள் வைத்திருக்கிறாய் எடப்பாடி?

 

ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் ஓடிய சாலைகளில் இப்போது மனித ரத்தங்கள் கலந்து பாய்கிறது.

ஆலையின் நச்சு வாயுக்களை விட பிணத்தின் வாடை நெடிகள் உலகம் முழுவதும் நாறுகிறது.

மோடி எடப்பாடியின் ஏவல் ஆட்கள் சுட்ட குண்டுகளில் சிதறியது அப்பாவி மக்களின் மூளைகள்.

சாலையில் அடிபட்டு சிதறிக்கிடக்கும்
கொக்கு குருவிகளை போல பிணவறையில் கிடத்தப்பட்டியிருக்கும் மனித உடல்களை பார்க்கையில் உடல்களில் அமிலம் பாய்ந்தது போல பற்றி எரிகிறது.

10 க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்து, சிந்திய ரத்தங்கள் காயும் முன்னே அடுத்த பலி ஆஸ்பத்திரியின் வாசலிலே.

உங்களை எங்களை ஆளத்தானே ஆட்சியில் அமர வைத்தோம். ஆனால் நீங்கள் உங்களது எஜமான் அனில் அகர்வாலிடம் வாக்குறுதியை நிறைவேற்ற உங்களது ராஜ்ஜியத்தின் துப்பாக்கிகள் எங்களது உயிரை குடித்துக் கொண்டே இருக்கிறது.

உங்கள் துப்பாகிகளில் இன்னும் எத்தனை தோட்டாக்கள் சுடாமல் மீதம் இருக்கிறது மிஸ்டர் எடப்பாடி?

தோட்டாக்கள் தீர்ந்து போன பிறகு
ஒரு வேளை அடுத்தடுத்த தோட்டாவும், பீரங்கிகளும் லண்டனிலிருந்தும் டெல்லியிலிருந்தும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரலாம்.

நானும் ஆட்சியாளன் என சொல்லிக் கொண்டு எங்களது வியர்வையின் உப்பு நீரில் நீங்கள் மஞ்சள் குளிப்பதை இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.

பூட்டிக் கிடந்த ஆயுத அறைகளை திறந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிகளுக்கு எண்ணெய் தடவி எஞ்சிய மக்களையும் கருவறுக்க
காத்திருக்கும் கோவம் காக்கிகளின் கண்களிலும் பேச்சிலும் தெரிகிறது.

இந்த இரவு முடிவதற்குள் எத்தனை பேரை நீங்கள் அடித்தும் சுட்டும் கொல்லுவீர்கள் என்கிற அச்சம் பசியையும் தூக்கத்தையும் தாண்டி படபடப்பை உண்டாக்கி வருகிறது.

காக்கைகளைப் போல மனிதர்களை சுட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளை இந்த உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகளையும் வாய்களையும் பொத்திக் கொண்டு இருக்கிறது என
நினைக்கிறார்கள் ஆதலால்தான் மீண்டும் மீண்டும் துப்பாக்கி குண்டுகளால் அப்பாவிகளை, பொடியன்களை, பெண்களை துப்பாக்கிகளால் துளைத்துக் கொண்டே இருக்கிறீர்களா?

நீதிபதிகளே நீதி கேட்டு டெல்லியின் சாலைக்கு வருகையில் எஜமான்களை உருவாக்கும் மக்கள் நீங்கள் ஏன் இன்னமும் அமைதியாக இருக்கிறீர்கள்?

அடுத்த உயிர் இந்த மண்ணில் வீழ்வதற்குள் எடப்பாடிகளின் கூடாரங்களை காலி செய்ய என்ன செய்யப் போகிறீர்கள்?

 

-சண்.சரவணக்குமார்

Leave A Reply

Your email address will not be published.