மோசடியின் தலைநகர் திருச்சி!  சீட்டு கம்பெனியில் பணம் போடுகிறீர்களா? மக்களே உஷார்

0 152

மோசடியின் தலைநகர் திருச்சி  

சீட்டு கம்பெனியில் பணம் போடுகிறீர்களா?  மக்களே உஷார்

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு காரைக்குடி, புதுக் கோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஜீவன் ப்ராப்பர்டி புரொமோட்டர் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் சீட்டு கம்பெனி 1000க்கும்மேற்பட்டோரிடம் இருந்து ரூ.24கோடி மோசடி செய்துள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் எண்.168, முதல் மாடி, ஜெ.ஜெ. டவர் என்ற முகவரியில் ஜீவன் ப்ராப்பர்டி புரொமோட்டர், கடந்த 2011ம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தின் ஒரு கிளையை இயங்கிவந்தது.

இதன் இயக்குநராக கே. மரியடேவிட், அவரது மனைவி ஞானஜோதி, மைத்துனர் கென்னடி, சகோதரர் ராயர்சாமி ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிறுவனம் தனியாக ஏஜெண்ட்களை அமைத்து சீட்டுபோடுவதற்கு ஆட்களை சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுவந்தது. அதன் படி இதில், சேர்ந்த பொது மக்களிடம் இருந்து, ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என மாத தவணையாக அந்த நிறுவனத்தில் இருந்த பல்வேறு திட்டத்தின் கீழ் பணம் வசூல்செய்யப்பட்டது.

 

5 வருட முடிவில் அவர்கள் கட்டிய பணத்திற்கு ஏற்றவாறு 9 சதவீதம் வட்டி கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், ஆள்பிடித்து விடுவோருக்கு ரூ.12,000த்துக்கு 2,000கமிஷன் வழங்கப்படும் எனவும் ஏஜெண்ட்டுகள் அல்லாமல் தனிநபர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், பலர் இதுபோன்று கமிஷனுக்காக இந்த நிறுவனத்தில் செயல்பட்டுவந்தனர். இதனால், இந்த நிறுவனத்தில் சீட்டுபோடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்நிலையில் பலரின் சீட்டு வரும் ஜீன் மாதத்தோடு நிறைவடைய இருந்த நேரத்தில், கடந்த ஜனவரி மாதம் இந்த அலுவலகம் இடம் மாற்றப்படுகிறது. 12ம் தேதி முதல் பட்டறைக்காரதெரு கோரிப்பாளையம் மதுரை 2 என்ற முகவரியில் இயக்கும் எனவும், இதை பொது அறிவிப்பாக நாளிதழில் வெளி வந்த செய்தியும் அலுவலத்தில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் இந்த நோட்டீஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த வெள்ளி பரமசிவத்திற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

 

பிப்ரவரி 15ம்தேதி திருச்சி வந்த அவரோ இன்னும் ஒரு மாத்த்தில்மொத்த பணமும் செட்டில்மென்ட்செய்யப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியதுபோல் பணம் திரும்பி வராத காரணத்தினால், திருச்சி மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர் பாதிக்கப்பட்டோர்.

இது குறித்து மண்ணச்சநல்லூர் தாலுக்காவைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட சந்திரசேகர் கூறுகையில், நான் ஆக்டிங் ஓட்டுநராக இருக்கேன். மேலசிந்தாமணியில் வசித்து வந்த பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி புஷ்பராணி இருவரும் இணைந்து

எங்கள் பகுதியில் வட்டிக்கு பணம்கொடுத்துட்டு இருந்தார்கள். நானும் அவர்களிடம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன். ஒரு நாள் 2பேரும் என்னிடம் மாதந்தோறும் உனக்கு நல்ல வருமானம் வர மாதிரி வேலை இருக்குனு சொல்லி இந்த நிறுவனத்தில் சேர்த்து விட்டுட்டார்கள். அதுமட்டுஇல்லாமல் ஆள்பிடிச்சிக்கொடுத்த கமிஷன் கிடைக்கும், சிறந்த வேலைக்காக விருது வழங்குவோம், நீங்கள் வேலை செய்யரதுக்கு தகுந்த மாதிரி வருமானம், ஏற்கனவே சிவகங்கையில் இதுபோன்று பலர் இணைந்துள்ளனர் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறினார்கள்.

அதனை நம்பி கடந்த 2013ம் ஆண்டு முதல் நான் சேர்ந்து இயங்க ஆரம்பித்தேன். அது மட்டுமின்றி எனக்கு தெரிந்தவர்கள், ஊர் மக்கள் என மொத்தம் 127பேரையும்சேர்த்து விட்டேன். மொத்தம் ரூ.15 லட்சத்தை தவணை முறையில் பழனிச்சாமி அவரது மனைவி மூலம் இந்த நிறுவனத்தில் செலுத்தி வந்தேன். தற்போது 5 வருடம் முடியும் நேரத்தில் நிறுவனத்தை மூடிவிட்டுசென்று விட்டார்கள்.

இது குறித்து மரியடேவிட்கேட்டபோது லால்குடி, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் தனக்கு 170 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அதை விற்று பணம் தருவதாகவும் கூறினார். ஆனால், இன்று வரையில் தரவில்லை. இது குறித்து நான் பழனிச்சாமியிடம் அடிக்கடிகேட்டதால், ஒரு நாள் மரியடேவிட் ஆட்களுடன் வந்து என்னைகொற்று விடுவதாக மிரட்டிவிட்டும்சென்றார். ஆனால், என்னை நம்பி பணம்கொடுத்தவர்கள் அனைவரும் என்னிடம் பணத்தை திருப்பிக்கேட்கின்றன்.

 

அவர்களின் என்ன கூறுவது என்றுதெரியாமல் குற்றஉணர்வுடனேயே நான் தினமும் நடமாடிக்கொண்டிருக்கிறேன். இதில், நான் மட்டுமல்ல என்னைபோன்று பலர் ஏமாந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் இருந்து ரூ.26 கோடி வரையில் மோசடி செய்துள்ளார். அவர்கள் யாருமே என்ன செய்வதென்று அறியாமல் இருக்கின்றனர். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களது தற்போதைய கோரிக்கையாக உள்ளது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.