டிடிவி.தினகரனை பழிவாங்கிய இளவரசி – சசிகலா குடும்பம் !

0 215

சசிகலா இளவரசி குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்காமல் தானாகவே வளர்ந்து வந்தவர் டிடிவி. காலத்தின் கட்டாயத்தினால் இளவரசி சசிகலா குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டர் . ஜெ. மரணத்தின் போது காலத்தின் கட்டாயத்தால் கட்சியை வழி நடத்தும் பொறுப்பை கொடுத்த சசிகலா. தற்போது டிடிவியின் வளர்ச்சி தங்களின் எதிர்காலத்தை கேள்விகுரியாக மாற்றுகிறது என்பதை அறிந்து தற்போது தினகரனை மீண்டும் பழிவாங்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, ஜெயா டீவி தலைமை செயல் அதிகாரி விவேக், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு மகள் ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், நடராஜன் தம்பி பழனிவேல் என சசி குடும்பமே அவரை சந்தித்து நடப்பு அரசியல் நிலவரம் குறித்து புலம்பியுள்ளனர்.

சசிகலா சொன்ன மூன்று வேலைகளை தினகரனிடம் சொல்லியும், தினகரன் தட்டிக்கழித்த விவரத்தை விவேக்கும், சசிகலாவின் தம்பி பழனிவேலை சந்தித்து திவாகரன் கொடுத்த திட்டத்தை பழனிவேலும் எடுத்துக் கூறியுள்ளனர்.

அதன்பின், இளவரசியின் இரண்டு மகள்களும், அமமுக தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களுக்கு தினகரனின் அதிகார மமதை தான் காரணம் என்றும், முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுக வில் ஐக்கியமாக இருப்பதையும் சசிகலாவிடம் விவரித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே பெங்களூரு சிறையில் இருந்து தினகரனுக்கு அழைப்பு வந்துள்ளது. முதலில் நாளை, நாளை மறு நாள் என தட்டிக்கழித்த தினகரன், ஒரு கட்டத்தில் சென்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சசிகலாவை சந்திப்பதற்கு வழக்கமாக தன் மனைவி அனுராதாவையும் உடன் அழைத்துச் செல்லும் தினகரன், இம்முறை தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

சசிகலா உடனான சந்திப்பின் போது, அவரது பதவி ஆசையையும், செயல்பாடுகளையும் பற்றி காரசாரமாகத் திட்டியதோடு, திவாகர் கொடுத்து அனுப்பிய மெசேஜ் பற்றியும் எடுத்து சொல்லியுள்ளார்.

அதன்பின், வழக்கத்திற்கு மாறாக மிக மிக இறுக்கமான முகத்துடன் வெளியே வந்த தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, என்னையும், எனது மனைவி அணுராதாவையும் தாறுமாறாகத் திட்டுகிறார் சசிகலா. இவர் இப்படி திட்டுவார் என்று எனக்கு தெரியும். அதனால்தான் எப்பொழுதும் என் மனைவியுடன் வந்து சசிகலாவை சந்திக்கும் நான், இந்த முறை மனைவியை அழைத்து வரவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்.

மேலும், தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சசிகலாவிடம் அவர்களது உறவினர்கள் முன் வைத்துள்ளதை அறிந்த தினகரன், அதற்கு முன் தானாகவே ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஒரு வேளை, தினகரன் ராஜினாமா செய்யும் பட்சத்தில், கட்சியின் தலைமை பொறுப்பிற்கு யாரை நியமனம் செய்வதென்று மன்னார்குடி குடும்பத்தில் பெரும் டிஸ்கஷன்கள் நடக்கிறதா

Leave A Reply

Your email address will not be published.