எஸ்.பி.ஐ வங்கியில் 1500 கோடி கடன்

0 100
நாட்டின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடந்த மூன்று காலாண்டுகளாக தலா ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.  ஏற்கனவே 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்தநிலையில், ஊதிய பிரச்சனையை சமாளிக்கவும், நிறுவனத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்காகவும், எஸ்.பி.ஐ வங்கியிடம் ஜெட் ஏர்வேஸ் 1,500 கோடி ரூபாய் கடன் கேட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெட் ஏர்வேஸ் வாங்கும் கடனுக்கு அந்நிறுவனத்தின் பங்குதாரரான எத்திஹாட் உறுதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. எரிபொருள் சிக்கனத்திற்காக போயிங் 737 என்ற 5 புதிய விமானங்களையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

-தினத்தந்தி

Leave A Reply

Your email address will not be published.