வந்த விமானத்தில் திரும்பிய எடப்பாடி

திருச்சியில் அதிமுகவினர் ரகளை

0 137

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேரன் பாகுலேயன் காதணி விழா கடந்த 30ம் தேதி திருச்சியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து 30ம் தேதி காலை 10.45 இன்டிகோ விமானத்தில் திருச்சி வந்தார். வந்த வேகத்தில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 10 நிமிடம் மட்டுமே இருந்த முதல்வர் உடனடியாக விமானநிலையம் சென்று அதே விமானத்தில் சென்னை புறப்பட்டார். இதில் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் பங்கேற்கவில்லை.
முன்னதாக, முதல்வரை வரவேற்க விமான நிலையத்திற்குள் செல்ல திருச்சியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் பாஸ் வாங்கியிருந்தனர்.

 

குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடம் முன்னதாகவே விமானம் வந்து விட்டதால் பாஸ் வாங்கியிருந்த நிர்வாகிகள் அனைவரும் விமான நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த சிஐஎஸ்எப் வீரர்கள் முயன்றனர். ஆனால் அதிமுகவினர் அவர்களை கீழே தள்ளிவிட்டு உள்ளே செல்ல ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பாஸ் வாங்கியவர்கள், வாங்காதவர்கள் என அனைவரும் விமான நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்விழாவிற்காக, திருச்சி முழுவதும் (குறிப்பாக எல்.ஐ.சி, தலைமை தபால் நிலையம் என மத்திய அரசு கட்டிடங்கள் உட்பட எதையும் விட்டு வைக்காமல்) போஸ்டர்கள், பேனர்கள் என பல லட்சம் செலவு செய்தனர் அதிமுக நிர்வாகிகள். ஆனால், முதல்வர் 15 நிமிடம் கூட முழுமையாக பங்கேற்காத விழாவிற்கு ஏன் இவ்வளவு செலவு செய்யவேண்டும் என மக்கள் புலம்புகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.