கும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி ! 

0 768

கும்பகோணம் சென்னை சில்க்ஸில்  சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி !

 

கும்பகோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை அமைந்துள்ள கட்டடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சமீபத்தில் அக்கடைக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்..

கும்பகோணம் மேம்பாலம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு அதில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை திறக்கப்பட்டது. ஆனால் துணிக்கடையின் கார் நிறுத்துமிடம் மற்றும் திறந்தவெளி ஆகியவற்றுக்கு அனுமதி பெற்ற அளவிலான இடம் விடவில்லை என்று செல்வராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

 

அதன்படி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் இன்று சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள இடம் மற்றும் கட்டடத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர் .அனுமதி பெற்ற அளவில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா எனவும் அளவீடு செய்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

இந்த நிலையில் தற்போது உள்ளுர் திட்டகுழும அனுமதிக்கு மாறாக கட்டம் கட்டியுள்ளதாக நீதிமன்ற உத்தரவுப்படி கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.