யார் இந்த சாமுவேல் மேத்யூஸ்

0 276

யார் இந்த சாமுவேல் மேத்யூஸ்?

கோடநாடு கொலை, கொள்ளை முயற்சி சம்பவங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்த, பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ் யார்?

கேரளாவில் கொல்லம் அருகே பதனபுரம் நகரத்தை, பூர்வீகமாக கொண்ட சாமுவேல் மேத்யூஸ், கல்லூரி படிப்பை சொந்த ஊரில் முடித்த பின்னர், பத்திரிகையாளர் பணிக்காக டெல்லிக்கு சென்றார்.

தலைநகர் டெல்லியில் மங்களம், மிட் டே, இந்தியா டுடே, NEWS X, இந்தியா டிவி போன்ற ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

இணையதள புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா தொடங்கப்பட்ட போது, அதன் செய்தியாளராக சேர்ந்து பின்னர், அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக, பதவி உயர்வு பெற்றவர் சாமுவேல் மேத்யூஸ்.

Operation West End என்ற பெயரில், போலியான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கேட்டு, மேத்யூஸ் மேற்கொண்ட புலனாய்வு செய்தியால், கடந்த 2001-ம் ஆண்டு, அப்போதைய மத்திய பாஜக ஆட்சியில், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராஜினாமா செய்ய நேரிட்டது.

மேலும், அப்போதைய பாஜக தலைவர் பங்காரு லட்சுமண், லஞ்சம் பெறும் வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் சாமுவேல் மேத்யூஸ்.

2016-ம் ஆண்டு, தெஹல்கா ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாராதா நியூஸ் என்ற புலனாய்வு இதழை தொடங்கினார் மேத்யூஸ்.

மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடியை அம்பலப்படுத்தியதுடன், திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தியவர் சாமுவேல் மேத்யூஸ்.

மேலும், ஆதார் அட்டை வழங்கும் பணிகளில் உள்ள குளறுபடிகளை அம்பலப்படுத்தும் வகையில், சந்தோஷ் சங்கரன் என்ற பெயரில், தனக்கு ஆதார் அட்டையை பெற்றுக் காட்டியவர் சாமுவேல் மேத்யூஸ்.

Leave A Reply

Your email address will not be published.