இவர் தான் நம்ம மாவட்ட அமைச்சர் !

0 301

இவர் தான் நம்ம மாவட்ட அமைச்சர் !

 

புதிய பஸ்கள் துவக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பத்திரிகையாளர்  இந்திய அளவில் தமிழக சுற்றுலாத்துறை சிறப்பான இடம் பிடித்திருக்கிறது. ஆனால் அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லையே?

 

பல மாவட்டங்களில் ஏன்  திருச்சியில் கூட உயர் பொறுப்புகளில் அதிகாரி இல்லையே?  என்று கேட்க, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காலியாக இருந்த இடங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்று ஓரெடியாக அடித்து விட்டார்.

 

ஆனால் உண்மை நிலவரம் என்ன வென்றால் திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் இடம் காலியாகவே உள்ளது. தற்போது நாமக்கல்  அதிகாரிதான் திருச்சிக்கு பொறுப்பு வகிக்கிறார். அவர் வாரத்திற்கு 2 நாட்கள் தான் வருகிறார். இதனால் இந்த துறையில் பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது. இது கூட அமைச்சருக்கு தெரியலையே  இவர் தான் நம் மாவட்ட அமைச்சர் என்று புலம்பிக்கொண்டே நகர்ந்தனர் பத்திரிகையாளர்கள்.

Leave A Reply

Your email address will not be published.