தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்…

சொத்து பிரச்னை காரணமாக 80 வயது தந்தையை குண்டுகட்டாக வெளியே தூக்கி அடித்த மகள்!

0 145

சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை ஆட்களை வைத்து மகளே குண்டுகட்டாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூவேந்தர் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராஜ். இவருக்கு ராஜ்குமார், பாபு ஆகிய 2 மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். தனலட்சுமியும் அமெரிக்காவில் கணவர் பாலமுரளியுடன் வசித்து வந்திருக்கிறார். அப்போது தனராஜ் தனிப்பட்ட காரணங்களுக்காக மகள் தனலட்சுமிக்கு தனக்குச் சொந்தமான வீடு ஒன்றை, தான பத்திரமாக கடந்த சில வருடங்களுக்கு முன் எழுதிக் கொடுத்துள்ளார். 

 

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 80 வயதாகும் தனராஜ், திடீரென தன் மகளுக்குத் தானமாக எழுதிக் கொடுத்த அந்தச் சொத்தின் பதிவை ரத்து செய்து விட்டதாகக் கூறியதுடன், இனிமேல் அந்தச் சொத்தின் முழு உரிமையும் தனக்கு எனவும் கூறி அந்த வீட்டில் வந்து குடியேறியுள்ளார்.

 

இதையடுத்து ஆத்திரமடைந்த  தனலட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோர்  வீட்டில் இருந்த தனராஜை, ஆட்களை வரவழைத்து வீட்டிலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றியுள்ளனர். அத்துடன் அவர் வசித்து வந்த அறையிலிருந்த சோபா, நாற்காலி, மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும் தெருவில் வீசியுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.