சீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள்….மீசை முறுக்கும் வீரத் தமிழன்…அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

0 172

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது.

கலெக்டர் நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 636 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளை அடைக்க வீரர்கள் படு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இன்சூரன்ஸ் முன்னதாக, இவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்தான் மைதானத்துக்குள் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

இது வேறு எப்போதும் இல்லாத முதன் முதலாக செய்யப்படும் புதிய அம்சம் ஆகும். பாதுகாப்பு பணி ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு மைதானத்தை சுற்றிலும்1095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதைதவிர 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவை தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது. ஆரவாரம் போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், கட்டில், பீரோ, என பல பரிசுபொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது பிற ஊர்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். பாய்ந்துவரும் காளைகளை அடக்கும் காளையர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வருவதால், அவனியாபுரமே அமர்க்களமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.