விஷால் திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான்!

0 1,049

நடிகர் விஷாலின் திருமணம் தொடர்பாக சமீப காலமாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அனிஷா அல்லா ரெட்டி என்ற நடிகை தானும் விஷாலும் கரம்பிடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.

இவர் அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர்.

இதனை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்ததோடு விஷாலுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். திருமணம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.

முன்னதாக, நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவுக்கும் திருமணம் செய்து வைக்க  விஷாலின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், விரைவில் ஹைதராபாத்தில் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதனை விஷால் மறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது திருமணம் குறித்து செய்திகள் மீண்டும் வெளியாகியிருக்கிறது. இந்தமுறை விஷால் தரப்பிலிருந்து மறுப்பு ஏதும் வரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.