பதிப்பகங்கள் மூடுவிழா !

இப்படியே தொடர்ந்தால் ...

0 200

வழக்கமான விற்பனை இம்முறை இல்லை. ஆகவே, POD எனப்படும் ஜெராக்ஸ் பிரிண்டிங் முறை, பதிப்புத்துறையையே சீரழிக்கப் போகிறது என்று புத்தகக் காட்சியில் ஆரூடம் சொல்கிறார்கள்.

எனக்கென்னவோ பாதிப்பு சிறுபத்திரிகை/இலக்கிய வட்டாரத்துக்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது. PODயில் முதலீடு குறைவு என்பதால் கண்டதையும் (யெஸ், கண்டதையும்) டைட்டில் ஆக்கிவிடுகிறார்கள். 100 டைட்டிலுக்குதான் மார்க்கெட் இருக்கும் இடத்தில் தலா 30, 50 காப்பிகள் போட்டு ஆயிரம் டைட்டில்களை விற்க முயற்சிக்கிறார்கள். மற்றபடி செலக்டிவ்வாக தங்கள் வாசகர்களின் தேவையறிந்து டைட்டில் கொண்டுவந்த பாரம்பரியமான பதிப்பகங்கள் திருப்தியான சேல்ஸ் என்கிறார்கள்.

ஒரு பதிப்பகத்துக்கு பெயர் சொல்லும்படியாக ஒரு சூப்பர்ஹிட் செல்லராவது வருடத்துக்கு ஒன்றிரண்டு இருக்க வேண்டும். பதிப்பகத்தின் நீண்டகால திட்டமிடலும், எழுத்தாளரின் உழைப்பும் மட்டுமே அதை சாத்தியமாக்கும்.

புக்ஃபேருக்கு ஏதோ புக்கு கொண்டுவர வேண்டுமே என்று தட்டு முட்டு ஃபேஸ்புக் சரக்குகளை தூசி தட்டி அவசர அவசரமாக நவம்பர் மாசம் முடிவெடுத்து, டிசம்பரில் ப்ரூஃப் கூட பார்க்காமல் PODயில் 30, 50 காப்பிகள் போட்டு கடைக்குக் கொன்டுவந்தால் எப்படி உருப்படும்?

பெரிய முதலீடு தேவைப்படுகிறது எனும்போதுதான் நஷ்டம் அடையக்கூடாது என்கிற பதட்டம் இருக்கும். ஒரு புக்குக்கு மூவாயிரம், நாலாயிரம்தானே செலவு, பார்த்துக்கலாம் என்று இஷ்டத்துக்கும் அலட்சியமாக புக்கு போட்டுக் கொண்டிருந்தால், இன்னும் கொஞ்ச காலத்தில் ஏராளமான சிறுபத்திரிகை/ இலக்கியம் சார்ந்த பதிப்பகங்கள் வாசகர்களின்றி மூடுவிழா காண வேண்டியதுதான்.

Leave A Reply

Your email address will not be published.