கிறிஸ்தவ சபை எப்பொழுது சீரழிய ஆரம்பித்தது?

0 145

சபை எப்பொழுது சீரழிய ஆரம்பித்தது?

புதிய ஆத்துமாக்களை ஆதாயம் செய்யாமல் ,பிரதர் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்தீங்களா? சிஸ்டர் அந்நிய பாஷை பேசுரீங்களா? இல்லையா… ஐயோ பிரதர் ஆவிக்குரிய எங்க சபைக்கு வாங்க என்று சீர்திருத்த சபை விசுவாசிகளை பின் வாசல் வழியாக களவாட ஆரம்பித்ததிலிருந்து..

பள்ளிப்படிப்பில் தேற முடியாத பெந்தேகோஸ்தே போதகர் எப்பொழுது தன் பெயருக்கு பின்னால் Rev. Dr. BISHOP , Rt. Rev போட ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து…

பெந்தேகோஸ்தே சபைகள் என் சபை விசுவாசிய அவன் திருடிட்டான், என் ஏரியா உள்ள சபை ஆரம்பித்து விட்டான் என கேவலமான சண்டை போட ஆரம்பித்ததிலிருந்து…

விசுவாசிகளிடம் மனசாட்சி இல்லாமல் காணிக்கை என்ற பெயரில் எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவு உருவி விட்டு.. அவன் வரவு செலவு கணக்கு கேட்டால் உன் ஆவி சரியில்ல என்று சபையை விட்டு நீக்கியதிலிருந்து….

சுய வெறுத்தலின் அடையாளமாய் நகையை கழற்ற சொன்னால்.. நகை போடாமல் அதனை விட ஆடம்பரமாக வாட்ச் உடை பேங்க் பேலன்ஸ் என்று மறைமுக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்ததிலிருந்து..

10லட்ச ரூபாய் காரில் போகும் பாஸ்டர் ஐயாவிற்கு 5 லட்சத்தில் கார் வாங்கிவிட்டு மீதியை தன் சபையில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்ற எண்ணம் இல்லாமல் போனதிலிருந்து…

சபையின் வரவு செலவு விவரத்தை கர்த்தருக்கு மட்டும்தான் காட்டுவேன் என்று ஆவிக்குரிய விதமாய் பேசுவதாக காண்பித்து சூட்சமமாய் விசுவாசியிடம் மறைத்ததிலிருந்து…

புதிய திராட்சை ரசம் என கூறி மதிமயங்கச் செய்யும் ஆட்டம் பாட்டத்தின் மூலம் சபையை கூத்தாடும் களமாய் மாற்றியதிலிருந்து…

மிஷனெரி ஊழியத்தின் மூலம் மிஷனெரியை தாங்கிக் கொண்டிருந்த விசுவாசியிடம் , மிஷனெரி காணிக்கையை சபையில் கொடுங்கள் , சபை மூலம் மிஷனெரியைத் தாங்கலாம் எனக்கூறி… விசுவாசிகளால் 10 மிஷனெரிகள் தாங்கப்பட்ட சூழலில் அதை 2மிஷனெரியாக மாற்றி சாதனை புரிந்ததிலிருந்து..

பணக்கார விசுவாசியை ஓட ஓட விரட்டி அவனிடம் சபை வளர்ச்சிக்காக என வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்ததிலிருந்து…

முழங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தவனை ஓர்ஷிப் என்ற பெயரில் நிற்க வைத்து முழங்கால் படியிடுதலை மறக்க வைத்ததிலிருந்து….

சீர்திருத்த சபை மேலை நாட்டு முறைப்படி ஆராதனை நடத்துகிறார்கள் என்று கூறிவிட்டு, மேலைநாட்டு வாத்தியங்களான பேட், கிட்டார், டிரம்ஸ் , கீபோர்ட் என எல்லாம் வைத்து காது கிழிய சத்தம் வைத்து பக்கத்து வீட்டு புறமதத்தினனோடு பிரச்சனையை வளர்த்ததிலிருந்து…

பாஸ்டரை ஹூரோவா தொழ ஆரம்பித்து.. அவர் கபிரியேல் தூதனோடு ஆப்பம் சாப்பிட்டேன், இயேசுவோடு இட்லி சாப்பிட்டேன் என துணிகரமாய் பொய் கூறினாலும் , அவன் கூற்றை வேதத்தோடு உரசி பார்க்காமல் .. அலேலூயா போட்டதிலிருந்து…

இன்னும் எழுதலாம் ஆனால் கை (மனம்) வலிக்கிறது… போதும்..
சிந்திப்பீர்…சீரடைவீர்…
இன்றைய சபைக்கு தேவை ???

Leave A Reply

Your email address will not be published.