காதலே காதலே பகுதி-1

0 107

College first yearல நா first bench, நா உக்காந்துட்டு இருந்த எடத்துல இருந்து கொஞ்சம் திரும்பனாலே போதும் அவன் முகம் தான் தெரியும்.

ஒரு நாள் அவன் leave போட, நானும் என்னடா இவன காணமேனு அவன் பக்கத்துல உக்கார்ர பைய்யன் கிட்ட “ உங்க friend இன்னிக்கு leave போல, என்னாச்சுனு எதார்தமா கேக்க, வயித்த வலி hostelல இருக்கான்னு சொன்னான்.

அந்த friend hostel போயிட்டு, நம்ம ஆளு கிட்ட “டேய் அந்த பொண்ணு நீ ஏன் வரலனு கேட்டாடா, அவ உன்ன தான் பாக்கறாடானு சொல்ல, மறுநாள் Classக்கு வந்ததும் ஒரு look குடுத்தான் பாருங்க.. என்னமோ நா அவன் கைய புடிச்சி இழுத்தா மாதிரி வேறப்பா😂

அட சய், ரொம்ப சீன் போடாதடானு தான நம்ம react பண்ணிற்கனும், ஆனா breakல eye to eye பாத்ததால, “இப்போ பரவாலையா stomach pain” அப்டினு கேக்க,சிரிச்சிட்டே இப்போ ஓகேனு சொன்னான்.

அந்த ஓகேல தான் ஆரம்பிச்சது எல்லாமே 😍

 

நன்றி-ஹேமா சங்கர்

 

Leave A Reply

Your email address will not be published.