காதலே காதலே பகுதி-2

0 106

Day 2, காதலே காதலே♥️♥️♥️

முதல்முறை phoneல பேசறோம்.

அவன்:சொல்லு.. என்ன பேசறதுனு தெரியல
நா: சரி, உன்ன பத்தி சொல்லு

He: நா சங்கர், உனக்கு தெரியுமே.. அதான் classல self introல சொன்னனே என்ன பத்தி

நா: எது, stageல நின்னு, ஒரு நிமிசம் dance ஆடிட்டு போனியே அதான் intro வா. நா கவனிக்கல அப்போ.

He: சரி, நா சங்கர், சென்னை, வளந்தது எல்லாம் சைதாபேட்ட, இப்போ அம்பத்தூர்ல இருக்கோம்,அப்பா,அம்மா, தம்பி.

Me: wow. U r from Chennai.Cool.Where u studied?I have been to Chennai. My relatives r in nugambakkam.i guess saidapet is near to tat.

He: நா சைதாபேட்ட Govt Schoolல படிச்சேன். தமிழ் medium.அப்போறம் உன் அளவுக்கு Peter விட வராது. English தப்பா பேசனா சிரிச்சிடாத. சைதாபேட்டல தான் பொறந்ததுல இருந்து இருந்தோம்.செம்மையா இருக்கும். அங்க என் friends,எங்க area பசங்க,play ground, cricket,இப்டியே செம ஜாலியா இருக்கும்.இங்க வந்து hostelல ரொம்ப கஷ்டமா இருக்கு.

இப்டியே சைதாப்பேட்ட பத்தி ஒரு 15 நிமிசம் மூச்சு விடாம பேசனான்.

அந்த innocence, தயக்கமே இல்லாம பொண்ணுக்கிட்ட பேசறோம்னு இல்லாமா இயல்பா இருந்தது.

நம்ம கடந்து வந்த, பார்த்த உலகத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்க, புதுசா அவனோட உலகத்த கேக்கற அந்த feel இருக்கே…
நீ பேசிட்டே இருப்பியாம், நா கேட்டுட்டே இருப்பனாம்னு இருந்துச்சு ❤️

 

நன்றி-ஹேமா சங்கர்

 

முந்தைய தொடரை வாசிக்க

https://angusam.com/2019/02/17/17129love-love-part-1/

Leave A Reply

Your email address will not be published.