காதலே,காதலே பகுதி -3

0 162

காதலே,காதலே பகுதி -3

அவன் கிட்ட பேசும் போது எப்போவும், நம்ம friendsசா தான பேசறோம், வேற ஒன்னும் இல்லையேனு கேட்டுட்டே இருப்பான்.நானும் ஆமா, அதுல உனக்கு என்ன டவுட்னு சொன்னாலும் மனசுக்குள்ள சிரிச்சிக்குவேன். friends கிட்ட இவன பத்தி நிறைய சொல்லிட்டே இருப்பேன்.

அப்போ பொங்கல்னு ஊருக்கு போயிட்டோம்.வீட்ல இருந்ததால நானும் பேச முடியல, அவனும் பண்ணல.அம்மாக்கு உடம்பு சரி இல்ல,காய்ச்சல் விட்டு, விட்டு வருதுனு msgல சொன்னான்.சரி hospital கூடிட்டு போ,blood test எடுக்க சொன்னா எடுத்துடுங்கனு சொன்னேன்.அப்புறம் அவனும் எதுவும் contact பண்ல, நா பண்ண msgக்கும் reply வரல.திரும்பவும் leave முடிஞ்சி college வந்த அப்புறம் தான் பேசனோம்.

எதோ ரொம்ப வருஷம் பாக்காமா இருந்தா எப்டி இருக்குமோ, அப்டி தான் இருந்துச்சு. ஆனா அப்பவும் கொஞ்சம் dulla இருந்தான்.என்னாச்சுனு கேட்டதுக்கு, அம்மாவ நினைச்சி தான் ஒரே கஷ்டமா இருக்கு. இப்போ உடம்புக்கு பரவால்லையானு கேட்டேன்.இப்போ பரவால்ல ஆனா ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டபட்டுட்டாங்கனு சொன்னான்..வீட்ல இருந்து நீ பாத்துட்டு வந்துற்கலாம்லனு கேட்டேன்.இல்ல அவங்க தான் இப்போ உடம்பு தேவலாம்னு college போக சொன்னாங்கனு சொன்னான்.

சரி, நான் அம்மா கிட்ட பேசட்டுமா, அவங்க health பத்தி கேக்கட்டுமானு கேட்டேன்..வேணாம்னு சொல்லிட்டான். இப்டியே சரியா பேசிக்காம ஒரு மாசம் ஓடிடுச்சு. Classல பாக்கற்தோட சரி..நானும் அவன் family,அம்மானு கவலையா இருக்கானு பேசல. Mobileல atleast forward msg, gud mng, gud night வராதானு, அதையே பாத்துட்டு, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

Model practical வரப்போகுதுனு observation, record, lab இப்டி ரொம்ப busya போயிட்டு இருந்துச்சு. நேர பாத்தா கூட பேச நினைக்கறான்னு தெரியும், ஆனா பேசாம போயிடுவான்.அப்போ தான் friend ஒருத்தி registerல அவங்க அப்பா போன் நம்பர் இருக்கு, அவங்க அம்மா எப்டி இருக்காங்கனு நீயே போன் பண்ணி கேளுனு சொன்னா. நானும் போன் பண்ணேன். முதல் மூணு தடவ அவங்க அப்பா எடுத்துட்டாரு, என்ன பேசறதுனே தெரியாம கட் பண்ணிட்டேன்.நாலாது டைம் அவங்க அம்மா எடுத்தாங்க.எனக்கு பயங்கர பதட்டமா இருந்துச்சு. ஆனாலும் Aunty நா சங்கர் கூட படிக்கிற பொண்ணு, இப்போ உடம்பு பரவால்லையானு கேட்டேன்.

அவங்களும், உன் பேரு என்னமா? சங்கர் பேச சொன்னானா?? எனக்கு எதுவும் இல்ல..ஜொரமா இருந்துச்சு, இப்போ ஒன்னும் இல்ல..கொஞ்சம் ஜீரண பிரச்சனை தான், சரியா போயிடும்னு சொன்னாங்க. அவங்ககிட்ட பேசிட்டேன்னு அவ்ளோ ஒரு சந்தோசம்.ஆனா அந்த சந்தோசம் ரெண்டு நாளைக்கு கூட நிலைக்கல. Lunch time hostel messகு வந்துட்டோம், அப்போ class friend, என் friendகு call பண்ணான். சங்கர் அம்மா தவரிட்டாங்கனு.Mess hallல இத சொன்னதும், கை, கால்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு..Roomக்கு அழுதுட்டே ஓடி போய் Mobile பாக்கறேன் 2 Missed cal இருக்கு.திரும்ப call பண்ணாலும் line போகல..Roomல கத்தி கத்தி அழ அரம்பிச்சிட்டேன்,friendsலாம் கட்டி பிடிச்சிட்டு, அழாதனு சொல்லிட்டு, அவங்களும் அழ ஆரம்பிச்சிட்டாங்க.

-ஹேமா சங்கர்

முந்தைய தொடரை வாசிக்க லிங்கை கிளிக் செய்யவும்..

https://angusam.com/2019/02/17/17137love-love-part-2/

Leave A Reply

Your email address will not be published.