“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

ஜீவா இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்

0 157

 இயக்குநர் விஜய் இயக்கயவிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனவ்த் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாவாக எடுப்பது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது. சினிமா நடிகர் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வரை அனைவரின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கைக் கதையை ஏற்கனவே மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி நித்யா மேனன் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

அதையடுத்து இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனவ்த்  நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்
இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதைக்குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், ‘ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை இயக்குவது மிகுந்த பொறுப்புணர்வு மட்டுமின்றி பெருமையானதும் கூட.அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஜெயலலிதாவாக, கங்கனா ரனவ்த் நடிப்பது பெருமையான விஷயம்’ என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.