இ-பாஸை தவறாக பயன்படுத்திய 3 பேர் கைது

0 491

வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கான இ-பாஸை (E-PASS) தவறாக பயன்படுத்திய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு என்பவர் நாகப்பட்டினத்திலிருந்து கார் மூலம் சென்னை செல்வதற்காக  வாங்கிய இ-பாஸை சென்னையிலிருந்து திரும்பும்போது கும்பகோணத்தைச் சேர்ந்த நபர்களை அழைத்துவர தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோன்று, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஃபிளக்ஸ் நிர்மல் மற்றும் சங்கர் ஆகிய இரு நபர்கள் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட இரண்டு நபர்களை கூடுதலாக அழைத்துச் சென்றுள்ளனர்.

 

இதையடுத்து, மேற்படி மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கு காலத்தின்போது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும்  இ-பாஸ்களை தவறாக பயன்படுத்துவோர் மீதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மீதும், இ-பாஸில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!