அசீலாவின் திருச்சி கூலிப்படையினர் 4 பேர் கைது !!

1 1,244

தொழில் அதிபர் கொலையில் திருச்சி கூலிப்படை 4 பேர் கைது !!

 

தஞ்சையைச் சேர்ந்த யூசுப் காரில் சென்றுகொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி அண்ணா நகரில் பதுங்கியிருந்து கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 4 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரத்தக்கறை படிந்த இரண்டு பட்டாக் கத்திகள்; மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் மேம்பாலத்தில் ஜுன் 25-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த தஞ்சை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில், வல்லம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீதாராமன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், கழனியப்பன் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது கொலையாளிகள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளது தெரிவய வந்தது. அக் காட்சிகளை வைத்து கொலையாளிகளில் – திருச்சியை நடுப்பட்டியைச் சேர்ந்த சகாதேவன (26);, காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) ஆகிய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

 

அந்த விசாரணையில், யூசுப்-பை அவரது காதல் மனைவி அசீலா (37) கூலிப்படையினரை ஏவி கொலை செய்திருப்பது தெரியவந்தது. அசீலா தவிர, இக் கொலையில் 10 பேர் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அசீலா, சகாதேவன், பிரகாஷ் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

அசீலா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர்.

இந்நிலையில், தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி அண்ணா நகரில் பதுங்கி இருந்த குற்றவாளரிகள்  கேசவன் (28), சந்துரு (21), ஆறுமுகம் (21), பித்துக்குளி கார்த்திக் (26) ஆகிய நான்கு பேரை போலீஸார் சுற்றி வளைத்து விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த இரண்டு பட்டாக் கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

1 Comment
  1. நெடுஞ்செழியன் says

    நன்று

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!