548 நாளில் 996 குழந்தைகள் மரணம் பகீர் மருத்துவமனை – ஆர்.டி.ஐ. தகவலில்  அம்பலம் !

0 89

548 நாளில் 996 குழந்தைகள் மரணம் பகீர் மருத்துவமனை – ஆர்.டி.ஐ. தகவலில்  அம்பலம் !

 

 

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பாக்கியம் என்பது பெண்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. இதனால் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று இலட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தை பாக்கியத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு  மருத்துவனையில் மட்டும் 548 நாளில் 996 குழந்தைகள் மரணமடைந்த இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அரசு மருத்துவமனை என்பது இன்னும் அதிக பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை – ஆர்.டி.ஐ. அம்பலத்தியுள்ளார் தஞ்சையை சேர்ந்த விஜய் என்பவர்.

தஞ்சை அருகே வயலூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடியற்காலை ஐந்து மணிக்கு உடல்நிலை மோசமான நிலையில் தனது ஒன்றரை வயது மகனை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைகள் இறந்து விட்டதாக சொல்லி அனுப்பி வைத்தனர்.

 

இதையடுத்து வீட்டுக்கு சென்ற விவசாயி காலை 10 மணி அளவில் குழந்தைக்கு இறுதி சடங்கு செய்யும் போது குழந்தையின் உடலில் லேசான அசைவு இருந்ததை அடுத்து அதிர்ச்சியோடு குழந்தையை மீண்டும் ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார் அங்கு அப்போது இருந்த டாக்டர் குழந்தை அரை மணி நேரம் முன்பு இறந்து விட்டதாக பதிலளித்தார்.

 

இதனால் அந்த விவசாயி ஏற்கனவே விடியற்காலை குழந்தை அழைத்து வந்தபோது சரியான சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தஞ்சை மாநகரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தஞ்சையைச் சார்ந்த விஜய் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2019 ஜூன் 6ஆம் தேதி வரை எத்தனை குழந்தைகள் இறந்தனர் என்று விபரம் வேண்டும் என்று ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டிருக்கிறார். இதற்கு  பதிலளித்த அரசு மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 570 ஆண் குழந்தைகளும் 425 பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 995 குழந்தைகள் இறந்தனர் என்று பதிலளித்துள்ளார்.

இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து பொதுமக்கள் சிலர்  ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை மிகவும் பழமையான மருத்துவமனை இங்குள்ள பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் வார்டு மிகவும் புகழ்பெற்றது இத்தகைய சிக்கலான பிரசவம் என்றாலும் அங்குள்ள டாக்டர்களும் நர்சுகளும் தாயையும் சேயையும் காப்பாற்றிவிடுவார் என்ற பெருமை கொண்ட மருத்துவமனை. ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 995 குழந்தைகள் இறந்துள்ளது என்பது மிக அதிர்ச்சியாக உள்ளது குழந்தைகள் இறப்பு அதிகரித்துள்ள அதற்கான காரணத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் தமிழக அரசும் சம்பந்தப்பட்ட சுகாதரதுறை அமைச்சரும் முதலில் கண்டறிந்து ஆஸ்பத்திரியின் குழந்தைகளை இழப்பை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!