பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைவு !

0 160

பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைவு

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் புதுவையில் அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.

கோமதி என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமது பெயரை மன்னர்மன்னன் என மாற்றிக் கொண்டார்.

தந்தை வழியில் இளம் வயதிலேயே இலக்கியப் பணிகளில் ஈடுபட்ட இவர் எண்ணற்ற கவிதை நூல்களையும், வானொலி நாடகங்களையும், உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

பாவேந்தரின் மறைவுக்குப் பிறகு, ‘கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ என்ற தலைப்பில் தமது தந்தையின் சிறப்புகள் குறித்த நூலை எழுதி வெளியிட்டார்.

மன்னர்மன்னனின் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மன்னர்மன்னனின் மறைவினால் தமிழ்த்தாய் அவரது மகன்களில் ஒருவரை இழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு புதுச்சேரி காந்திநகர் முதல் குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

அவரது மறைவு இலக்கிய உலகத்தினரை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இலக்கியவாதிகளும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பல்வேறு நூல்களை எழுதியவர். வுhழ்நாள் முழுக்க வறுமையோடு போராடிய போதும், வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!