கரோனா பாதித்த இளைஞருக்கு “இன்ப அதிர்ச்சி” கொடுத்த கலெக்டர்!

0 858

 

கரோனா பாதித்த இளைஞருக்கு
பிறந்த நாள் கேக் வழங்கி
இன்ப அதிர்ச்சி அளித்த கலெக்டர்

கரோனா சிகிச்சை வார்டில் சக நோயாளிகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய இளைஞருக்கு அதற்கான அனுமதி அளித்ததோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக ‘கேக்’ வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்;;தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் புதுரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.


தஞ்சை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2700ஐ நெருங்கியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுகாவில் மட்டும் இதுவரை சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெற்றோர் மற்றும் நண்பர்களைப் பிரிந்து கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜுலை 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனது 21வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட அனுமதி வழங்குமாறு அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

அந்த இளைஞரின் கோரிக்கையை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்-ன் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

அந்த இளைஞரின் கோரிக்கையை ஏற்று பிறந்த நாள் கொண்டாட அனுமதி வழங்கியதோடு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த இளைஞருக்கு பிறந்த நாள் பரிசாக ‘கேக’; வாங்கி கொடுக்குமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ்-க்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மதனின் பிறந்த நாள் பரிசாக ‘கேக்’ வாங்கி கொடுத்தனர் அதிகாரிகள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மதன், மாவட்ட ஆட்சியர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப் போனார்.

இதைத் தொடர்ந்து, சக கரோனா நோயாளிகளுடன் சமூக இடைவெளிவிட்டு, முகக் கவசம் அணிந்து, கேக் வெட்டி தனது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடடினார் மதன்.

“கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகமூட்டும் வகையில் அமைந்த இந்த பிறந்த நாள் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நாள்,” என்றார் மதன்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கூறுகையில், அந்த இளைஞரின் விநோத கோரிக்கை குறித்து அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இளைஞரின் மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகமூட்டும் வகையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேக் வாங்கி தரப்பட்டது,” என்றார்.


மற்றவர்களின் பிறந்தநாளின்போதும் இதுபோல அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேக் வழங்;கப்படுமா எனக் கேட்டதற்கு, அவசிய தேவை ஏற்படின்; இதுபோல வழங்கி உற்சாகமூட்ட வேண்டும் என்றும், ஆனால் இதையே ஒரு ‘டிரெண்டாக’ ஆக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கோவிந்த ராவ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!