காங்கிரஸ் இனி மெல்ல சாகும்!….

0 165

காங்கிரஸ் இனி மெல்ல சாகும்!…. 

சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசு உப்புக்கு விதித்த வரியைக் கண்டித்து 1930 ஏப்ரல் 13 முதல் 30ம்தேதி வரை காந்தியடிகள் குஜராத் மாநிலம் தண்டி கடற்கரையில் சத்தியாகிரகம் நடத்தினார். அதேவேளையில்தமிழகத்தில் ராஜாஜி

தலைமையில், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று உப்பு அள்ளும் போராட்டம் நடைபெற்றது. திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையில் தொண்டர்களுடன் தொடங்கியயாத்திரை குழுவினர் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூர்,கும்பகோணம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி

வழியாக ஏப்ரல் 30-ம் தேதி

வேதாரண்யம் சென்றடைந்தனர். பின்னர், திட்டமிட்டபடி, வேதாரண்யத்தில் உள்ளஅகஸ்தியன்பள்ளி உப்பளத்தில் ராஜாஜி உப்பு

அள்ளினார்.  இந்த நிகழ்வில் வி.எஸ்.எஸ். ராஜன், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, சி. சுவாமிநாத செட்டி மற்றும் கே. சந்தானம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். உப்புச் சட்டத்தை மீறியதாக

நாடு முழுவதிலும் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்திய, பல்வேறு தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்குஅருகில் ராஜன் பங்களாவையொட்டி உள்ள  உப்புச் சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அருகிலிருந்து நினைவு யாத்திரைவருடா வருடம் நடந்து வருகிறது. இதில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் காந்தியவாதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஏப்ரல் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கும் இந்த யாத்திரை கல்லணை, தஞ்சாவூர், கும்பகோணம், நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, ஆயக்காரன்புலம் வழியாக ஏப்ரல் 30-ம் தேதி அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள  உப்புச்சத்தியாகிரக நினைவுத் தூணை அடைவர். அங்கு நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து சுதந்திரப் போராட்டத்தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்குள்ள உப்பளத்தில் இறங்கி உப்பு அள்ளி போராட்ட நினைவைநினைவுகூர்வர்.

அந்தவகையில், இந்த வருடம் உப்புச் சத்தியாக்கிரக 87-வது நினைவு யாத்திரை ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரையை உப்புச் சத்தியாக்கிரக யாத்திரை கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மருந்துக்குகூட காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது யாத்திரைக்கு வந்திருந்த சுதந்திர போராட்டதியாகிகளுக்கு மன வருத்தத்தை அளித்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நடைபெற்ற இந்த போராட்டத்தில் பலகாங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு சிறைக்குச் செல்ல, மக்கள் மத்தியில் காங்கிரசின் பெயர் அழுத்தமாகபதிந்தது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வின் நினைவு கூறும் யாத்திரையின் போது, காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவொருவரவேற்பும் இல்லாதது,  சுதந்திர போராட்ட தியாகிகளையும்,  உண்மையான காங்கிரஸ் தொண்டர்களையும்அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

மே மாதம் முதல் வார இதழில் வெளியானது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பெயர் சொல்ல விரும்பாத மூத்த தொண்டர் ஒருவர் நம்மிடம்

“இன்று சரித்திரப்புகழ் பெற்ற தென்னாட்டின் தண்டியாத்திரை என புகழப்படும் வேதாரண்யம் உப்புசத்தியாக்கிரஹம்திருச்சியில் மூதறிஞர் ராஜாஜியால் துவக்கப்பட்ட 87ஆம் ஆண்டு நினைவு தினம்.

வருடாவருடம் சத்தியாக்கிரஹ நிர்வாகிகள் அமைப்பு சார்பாக வெளியூர்களிலிருந்து முதல் நாள் இரவே திருச்சிக்குவந்து தங்கி,

திருச்சியின் தீரர் TSS ராஜன் வீட்டு வாசலிலிருந்து ராஜாஜி துவக்கியதன் நினைவாக,

எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸால் வைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியின் முன்னிருந்து ஊர்வலமாகபாதயாத்திரையாக புறப்பட்டு

திருவானைக்கோவில்,  திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி கிளிக்கூடு, கல்லணை வழியாக

தஞ்சை மாவட்டம் வழியாக நூற்றுக்கணக்கான தியாகிகள் நடந்து செல்வார்கள்.

தஞ்சை மாவட்ட எல்லை வரை இவர்களுக்கு வேண்டிய சகல சௌகர்யங்களையும் செய்து தருவதை ஒரு தவம்போல திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஒருகாலத்தில் செய்து தந்தது வரலாறு.

அடைக்கலராஜ் எம்பியாக இருந்தவரை உடனிருந்த மாவட்டத்தலைவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே பணத்தைஅள்ளிக்கொடுத்து, வந்த விருந்தினர்களை வயிறார உணவளித்து உபசரித்து அனுப்பச் சொல்வார்.

மாவட்டதலைவர்களாக அப்போது இருந்த கோட்டாத்தூர் ராமராஜ், சிவராஜ், சம்மந்த பத்தர்,வெங்கடாஜலம்ராஜசேகரன் ஆகியோர்  அடைக்கலராஜ் அள்ளிக்கொடுத்த பணத்திலிருந்து கிள்ளிக்கொடுப்பதே தடபுடல் விருந்தாகமணக்கும்.

பாதயாத்திரையில் அவர்களோடு மாவட்ட காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

என நூற்றுக்கணக்கானவர்கள் கல்லணை வரை கூடவே சென்று

எதிர் கரையில் தஞ்சை மாவட்ட எல்லையில் இவர்களை மேளதாளத்தோடு சின்னைய்யா ரெங்கசாமி மூப்பனார்தலைமையில் வரவேற்கக் காத்திருக்கும்

தஞ்சாவூர் காங்கிரஸாரிடம் அவர்களை ஒப்படைத்துவிட்டுத்தான் திருச்சிக்கு திரும்புவோம் இது அன்றைக்கு  அடைக்கலராஜ் அவர்களின் கண்டிப்பான உத்தரவு.

ஆனால்,

இன்று சத்தியாக்கிரஹ கமிட்டி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களான ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்சி பாபு, ஜெயப்பிரகாஷ் என மூவரையும் மாய்ந்து மாய்ந்து அழைத்தும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை…

லாப நட்டக் கணக்குப் பார்க்கும் கணக்குப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு கம்பெனி வேண்டுமானால் நடத்தலாம்கட்சி நடத்தமுடியாது…

வயதான தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஏதேனும் 4  மாவட்ட நிர்வாகிகளையாவது  அனுப்பியிருக்கலாம்.

காங்கிரஸ் திருச்சியில் அடைக்கலராஜ் காலத்தோடு காலமாகிவிட்டது”

“இந்த உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தில் காங்கிரஸிற்கு முக்கியப் பங்கிருக்கிறது. காங்கிரஸின் வளர்ச்சிக்குமிகவும் முக்கியக் காரணங்களில் ஒன்று. அன்று குல்லாவை போட்டுக் கொண்டு, கைகளில் பதாகைகளை பிடித்துக்கொண்டு,  திருச்சியில் இருந்து வேதாரண்யத்தை நோக்கி நடந்து செல்லும் போது பாடிய பாடல்களும், மக்களுக்குஉரைத்த காந்திய கொள்கைகளும் காங்கிரஸ் கட்சியின் மேல் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தின. அப்படிப்பட்ட ஒருநிகழ்வு தொடங்கிய திருச்சியில் 3 மாவட்ட தலைவர்கள் இருந்தும், யாத்திரைக்கு வந்த சுதந்திர போராட்டதியாகிகள் மற்றும் காந்தியவாதிகளை வரவேற்று, உபசரித்து அனுப்பி வைக்க முடியவில்லை.

இது சுதந்திரபோராட்ட தியாகிகளை அவமானப்படுத்தும் செயல்.  மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதுபோன்றுநம்முடைய பாரம்பரியத்தை நாம் மதிக்காததன் விளைவு தான் காங்கிரஸை பின்னடையச் செய்திருக்கிறது”என்றார்.

இதுகுறித்து உப்புச் சத்தியாக்கிரக நினைவு பாத யாத்திரை அமைப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம்

“1988-ம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், மாநில அரசோடு பேசி, அரசின் நிகழ்வாக இந்த உப்புச்சத்தியாக்கிரக நினைவு யாத்திரையை திருச்சியில் சிறப்பாக நடத்தினர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மத்தியஅமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு யாத்திரையை சிறப்பித்தனர். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில், இப்படிஒரு நிகழ்வு இருப்பதையே  காங்கிரஸ் மறந்துவிட்டது. இருந்தாலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும்காந்தியவாதிகள் பலரும் தொடர்ந்து இந்த யாத்திரையை தவறாமல் மேற்கொண்டு வருகிறோம்.

ஆரம்பத்தில்எங்களுக்கு மாவட்ட காங்கிரஸார் உபசரித்து மரியாதை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். நாங்களும்உற்சாகமாய் நடைபயணத்தை மேற்கொள்வோம். ஆனால், இப்பொழுது காங்கிரஸ் கட்சியும் சரி, மாவட்டநிர்வாகமும் சரி எங்களை சட்டை செய்வதில்லை. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து வருடாவருடம் இந்த நிகழ்வைகடைபிடித்து வருகிறோம். ஆரம்பத்தில் ஏப்ரல் 13-ல் திருச்சியில் இந்த பாத யாத்திரையை ஆரம்பித்து ஏப்ரல் 30-ல்வேதாரண்யம் சென்றடைவோம்.

ஆனால், இப்போது சரியான ஒத்துழைப்பு இல்லாததால், மார்ச் 13-ம் தேதிதிருச்சியில் ராஜன் பங்களாவில் நேதாஜி துவங்கிய இடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து, திருச்சியில் உள்ளகாந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நிகழ்வை முடித்துக் கொள்வோம். பிறகு மார்ச் 28-ம் தேதி மறுபடியும்வேனில் கிளம்பி வேதாரண்யம் செல்வோம்.

எங்களுக்கு சரியான ஒத்துழைப்போ, ஏற்பாடுகளோ இல்லாதகாரணத்தால் பாதயாத்திரை செல்ல முடியவில்லை. பலரும் பணஉதவி அளிக்க முன்வருகிறார்கள். ஆனால்இதனை ஏற்று செய்ய வேண்டிய காங்கிரஸ் கட்சியானது, இந்த நிகழ்வை மறந்தே போய்விட்டது. எங்களுடையகாலம் வரை நாங்கள் இந்த யாத்திரையை நாங்கள் மேற்கொண்டு மரியாதை செய்வோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.