முடக்கி விடலாம் என கைது செய்த போதே தோற்றுவிட்டார்கள்  அப்பா கைது குறித்து மகன் !

0 467

முடக்கி விடலாம் என கைது செய்த போதே தோற்றுவிட்டார்கள்  அப்பா கைது குறித்து மகன் !

 

திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று 23.05.2020  அதிகாலை கைது செய்யப்பட்டார்.

 

திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதோடு நீதிபதிகள் குறித்து அவர் பேசியதும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண்குமார் என்வர் கொடுத்த புகாரின்பேரில், ஆர்.எஸ்;.பாரதி மீது போலீஸார் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.

 

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார், ஆர்.எஸ்.பாரதியை இன்று அதிகாலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில்; கைது செய்தனர்.

 

மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் திமுக வழக்கறிஞர் அணியினர்.

 

 

R.S.பாரதி மகனின் பதிவு : அப்பாவிடம் தொலைபேசியில் பேசினேன். நான் முன்ன கைதானப்போ நீங்க சின்ன பசங்களா இருந்தீங்க.. விவரம் தெரியாது.. இப்ப வளர்ந்துட்டீங்க.. அதான் ஒரே வித்தியாசம்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார். வயது 73 ஆனாலும் அதே கம்பீரம்..

 

அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் கைது செய்ய யோசித்த போதே அவரிடம் தோற்றுவிட்டார்கள் கழகத்தின் எதிரிகள் என்பதை தான் உணர்த்தியது அந்த சிரிப்பு.

 

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். திமுக என்கிற மாபெரும் மக்கள் இயக்கம் எங்களுடன் இருக்கிறது அதன் தலைவர் தளபதி எங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கிறார் என்பதை உணர செய்தவர்களுக்கு நன்றி.

 

நேரிலும், தொலைபேசியிலும் முகநூலிலும் எங்களுக்கு ஆதரவு கொடுத்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

 

எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் ஒரு கை பார்ப்போம். என்று பதிவு செய்து உள்ளனார்.

 

எம்பி R. S. பாரதி தொடர்ந்த வழக்கு எதிர்வரும் மே 27 அன்று மறுவிசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இந்த கைது அவசியமா.?

 

வியாழக்கிழமை (21.05.2020) விசாரணையில், வழக்கு சம்மந்தமான கூடுதல் தகவல்களை கேட்ட “Additional Public Prosecutor” மற்றும் வழக்கு தொடர்ந்த “ஆதிதமிழர் கட்சியினருக்கு” கொடுக்க உத்தரவிட்டு, மே 27 மறுவிசாரனை என்ற நிலையில்

 

எந்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்  ஆர்.எஸ்.பாரதி என்று அதிமுக விளக்குமா.?

 

ஆவணம், ஆதாரம் இல்லாது தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தாரா..?

 

விசாரணையில் தெளிவாக ஆர்.எஸ் பாரதி தரப்பில்

“infelicitous language or even language that caused offence to some members of the public but in the absence of the specific intent mentioned in the statute, the speech (delivered on February 15), however disagreeable, cannot be a ground for registration of a First Information Report” என்று விளக்கம் கொடுத்தது சட்டப்படி செல்லும் என்பதாலும்,

 

மேலும் பிப்ரவரி 15ல் பேசியதற்கு மார்ச் 12ல் “அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்” வழக்கு பதியப்பட்டது என்று ஆணித்தரமாக வாதிட்டு,

 

மேலும் “The FIR nitpicks a few words here and there and assigns motives to stray sentences. The respondent police ought to have perused the whole speech without relying on the misleading extracts furnished by the complainant. The complainant must show prima facie that commission of cognisable offence has occurred” (என்னுடைய முழு பேச்சையும் கேட்காத, வெட்டி ஒட்டப்பட்ட வீடியோவை கொண்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், புகாருக்கான அடிப்படை ஆதாரம் காட்டவேண்டிய பொறுப்பு புகார்தாரருக்கு உண்டு) என்று அவர் ஆணித்தரமாக சட்டதுக்குட்பட்டு வாதாடியதாலும்,

 

அடுத்த விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால்,  அவரை அவசரமாக கைது செய்கிறது என்று குற்றம் சாட்டுக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, “நேற்று தான் ஓ.பி.எஸ்ஸின் ஊழல் குறித்து புகார் அளித்தேன். இப்போது கூட கோயம்புத்தூரில் கிருமி நாசினியில் ஊழல் செய்த எஸ்.பி.வேலுமணி குறித்து புகார் மனு தயாரித்து வருகிறேன். இப்போது நான் கைது செய்யப்படுவதால் எந்தக் கவலையும் இல்லை. நான் உள்ளே இருந்தாலும், வழக்குப் போடுவதற்கான வேலைகள் தடையில்லாமல் நடைபெறும்” என்றார்

Leave A Reply

Your email address will not be published.