பாட்டி நிலாவில் வட சுட்டாங்க….!

0 76

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் கூறினார் அது என்னவென்றால் மனிதர்கள் மீண்டும் நிலவில் காலடி எடுத்து வைப்பார்கள் என்ற வாக்குறுதியை அவர் அளித்ததாகவும் வெற்றி பெற்றார் ஆட்சியில் அமர்ந்தார் காலங்கள் உருண்டோடியது நாசாவும் அதனுடைய அடுத்தகட்ட நிலவு பயணத்திற்காக தயாராகியது இந்த நிலையில் கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக நாசாவின் நிலவு பயணம் சார்ந்த அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிலவுப் பயணத்தை நாம் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.

முதன் முதலில் நிலாவை குறித்த ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் சோவியத் ரஷ்யா தான் 1930 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் நிலவுப் பயணத்தை துவங்கிவிட்டார்கள். அவர்கள் 20க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை அனுப்பியவுடன் 1957-ம் ஆண்டு (ஸ்புட்னிக் 1) எனும் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலத்தில் முதலில் ‘லைக்கா’ எனும் நாயை விண்ணுக்கு அனுப்பியது இதனைக் கண்ட நான் மட்டுமல்ல உலகில் பல நாடுகள் வியப்புடன் பார்த்தனர், 1961 ஆம் ஆண்டு ‘யூரி காகரின்’ என்ற மனிதனை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பியது ரஷ்யா, அதே ஆண்டில் அமெரிக்காவும் ‘ஷபோர்டு ‘ எனும் விண்வெளி வீரரை பூமியைச் சுற்றி வலம் வரச் செய்தது, 1962 ஆம் ஆண்டு ‘வெலன்டினா டிரஸ்கோவா’ என்ற பெண்ணை முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பியது அனைத்து விண்வெளி சார்ந்த விஷயங்களிலுமே முதலில் இருந்து வந்தது சோவியத் ரஷ்யாதான்.
அதன் பிறகு சோவியத் ரஷ்யா மூன்று விண்வெளி வீரர்களுடன் அனுப்பிய விண்கலம் நிலவுக்கு செல்லும் வழியில் வெடித்துச் சிதறியதால் ரஷ்யா அதிர்ச்சிக்கு உள்ளானது. 1969 ஆம் ஆண்டு ஜான் கென்னடி எனும் அமெரிக்க அதிபர் மூன்று மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.

1969 ஆம் ஆண்டு ‘அப்போலோ 11’ என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் நாசா அனுப்பியது, அவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், பர்ஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலன்ஸ், இவர்கள் மூவருடன் ஜூலை பதினொன்றாம் தேதி நிலவில் இறங்கியது ‘அப்பல்லோ 11’ இருந்து ஈகிள் வாகனம் வெளியே வந்தது அதிலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் உடனே வெளியே வரவில்லை, அவர்கள் சந்திரனின் சுற்றுப்புறங்களை கண்காணித்தபடி இருந்தனர், 1969 ஜூலை 11 காலை 8:25 மணிக்கு அத்தனை தடவை தரை இறங்க சொல்லி சமிக்கை வந்தது, அதனால் ஆல்ட்ரின் கீழே இறங்க தயங்கியதால் 8:26 ஆம்ஸ்ட்ராங் இறங்கச் சொல்லி சமிக்கை வந்தவுடன் சற்றும் தயங்காமல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தன்னுடைய கால் தடத்தை பதித்தார் இருபத்து நான்காம் தேதி இரவு 10:19 க்கு கொலம்பியா கடற்கரையில் இறங்கியது, அப்பல்லோ 11 வெற்றியடைந்தது, அமெரிக்கா ஆனால் அவர்கள் சென்று வந்த பாதை நாசாவின் மேல் பல சந்தேகங்களை எழுப்புகிறது,
‘அப்போலோ 11’ எனும் விண்கலம் நிலவில் இறங்கவில்லை என்பதற்கான சில ஆதாரங்களை சில கோட்பாடுகளும் பலவிதமான கேள்விகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எழுப்புகின்றன அவைகள் பின்வருமாறு,

அமெரிக்காவின் அப்பல்லோ 11 எனும் விண்கலம் அதன் வீரர்கள் நிலாவிற்கு சென்றது எல்லாமே பொய் என்றும் அவை எல்லாம் மிகவும் துல்லியமான முறையில் திட்டமிட்டு படமாக்கப்பட்ட வகைகள் என்றும் பொருளை கிளம்பினர் அப்படியா அது பொய்தான் படமாக்கப்பட்ட அவைகள்தான் முற்றிலும் புரளிகள் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் வெளியாகின இதில் குறிப்பிடத்தக்க சில ஆதாரங்களுக்கு சில எதிர் பதிலோ அல்லது எதிர் விளக்கமோ இன்றுவரையும் கிடைக்கவில்லை,

காற்றில் ஆடும் அமெரிக்க கொடி:
அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் முதலில் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிபரப்பில் இருந்தது அதில் நிலவில் நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவது தெளிவாக காண முடிந்தது காற்று வீசுவதற்கு அது ஒன்றும் கடற்கரை பிரதேசம் அல்ல நிலவு என்பதை சூட்டிங் செய்த கும்பல் மறந்துவிட்டார், இந்த கேள்வியை பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நாசாவிடம் கேட்டபோது கொடி மடங்கி இருந்தது அது விரிக்கும் பொழுது காற்றில் ஆடியது போல தெரிகிறது என்று நாசா பதில் அளித்தது.

நிலவில் பள்ளங்கள் காணப்படவில்லை
நிலவு சற்று கடினமான ஒரு கிரகம் அங்கு முழுக்க பார்வைகளுடன் கூடிய நிலை பொறுப்புகளும் கொண்டது, அப்படியே இருந்தாலும் பாறைகளில் விண்கலத்தை இழக்க முடியாது இந்த இடத்தில் தான் சந்தேகம் எழுகிறது ‘அப்பல்லோ 11’ வின்கலம் நிலவில் தரை இறங்கியதற்கான எந்தவிதமான பல்லம் சொல்லும் வீடியோவில் பதிவாகவில்லை, வின்கலம் இரு வருடத்தில் மிகவும் மெதுவான முறையில் இறங்கியது போலதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வான் ஆலன் ரேடியேஷன் பெல்ட் தாண்டியது எப்படி?
நாசா அதன் முதல் முயற்சியிலேயே வான் ஆலன் ரேடியேஷன் பெல்ட் இந்த கடினமான புவியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி சென்றது எப்படி என்பது புரியாத புதிராகவே உள்ளது. நிலவு 384000 ளீனீ தொலைவில் உள்ளது, பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இந்த கடினமான பிறந்த சக்தி கொண்ட கதிர்வீச்சு இன்னர் பெல்ட் மற்றும் அவுட்டர் பெல்ட் என்று இரு வகைகளாக உள்ளன, இன்னர் பெல்ட் 400 கி.மீ. தொலைவில் ஆரம்பித்து 6300 கி.மீ. தொலைவு வரையிலும், அவுட்டர் பெல்ட் என்னும் வெளிப்புற காந்தத் தன்மை 10000 கி.மீ துவங்கி 60000 கி.மீ இந்த கடினமான அடுக்குகளை எல்லாம் தாண்டி சென்ற விண்கலம் மீண்டும் திரும்பி வந்தது தான் அனைத்து விண்வெளி ஆராய்ச்சி அவர்களையும் பெரும் சந்தேகத்தில் ஆழ்த்துகிறது.

புகைப்படத்தில் பதிவான விளக்கம் இல்லாத அந்த பொருள் என்னது?
நிலவில் இறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர் அதில் ஒரு புகைப்படத்தில் விண்வெளி வீரரின் தலைக்கவசத்தின் பிரதிபலிக்கும் காட்சியளிக்கிறது அது தரையில் இறங்கிய ‘அப்பல்லோ 11’ விண்கலமும் அல்ல என்ற பட்சத்தில் அது என்ன என்பது சார்ந்த எந்த விளக்கமும் இதுவரையும் நாசா தெரிவிப்பதில்லை.

பின்னணியில் மறைக்கப்பட்ட கேபிள்கள்
இது முழுக்க முழுக்க டிவியில் அரங்கேறிய நாடகம் என்கிறது ஒரு கோட்பாடு அந்த கோட்பாட்டின்படி நிலவின் புவியீர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிளில் இணைக்கப்பட்டு குதித்து செல்வார்கள் என்றும் சில புகைப்படங்களில் கேபிள்கள் தெளிவாக பார்க்க முடிகிறது.

ஆமாம் நட்சத்திரங்கள் எங்கே?
அப்போலோ 11 விண்கலம் இறங்கி இடத்தில் எங்கு பார்த்தாலும் பள்ளிக்குச் செல்லும் பசங்களுக்கு கூட தெரியும் பொதுவாக வானத்தில் நட்சத்திரங்கள் இன்றி நாம் காணமுடியாது எங்காவது ஒரு நட்சத்திரங்கள் இருக்கும் ஆனால் நாசா வெளியிட்ட புகைப்பட தொகுப்பில் உள்ள எந்த படத்திலும் சரி வீடியோ பதிவிலும் சரி எங்குமே நட்சத்திரங்கள் காணப்படவே இல்லை.

‘சி’ என்ற எழுத்து குறிப்பிடப்பட்ட பாறை
மூன் லேண்டிங் என்பது பொய் என்ற தகவல் பரவிய பின்னர் அங்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு புகைப்படமும் மிக அதி தீவிரமாக ஆராயப்பட்டது, இந்தமாதிரியான ஆய்வில் சி என்று எனும் கல் சிக்கியது இயற்கைக்கு மாறான முறையில் சி என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை அங்கு எப்படி வந்திருக்க முடியும்.
பொய்யான கிராஸ்-ஸேர்ஸ்.

வெளியான சில புகைப்படங்களில் கிராஸ்-ஸேர்ஸ் எடிட் செய்யப்பட்டுள்ளது அதாவது பதிவான புகைப்படத்தின் முன்பக்கத்தில் இருக்கவேண்டிய கிராஸ்-ஸேர்ஸ் சில புகைப்படங்களில் பதிவு ஆனால் பொருட்களுக்கு பின் பக்கத்தில் உள்ளது, ஆக, இவைகள் திட்டமிட்டு எடுக்கப்பட்டு நம்பும்படியாக எடிட் செய்யப்பட்டுள்ளது காட்டுகிறது என பலர் சந்தேகங்களை எழுப்பினார்கள் அதற்கு அதற்கு நாசா எந்த ஒரு வெண்மை நிறத்தோடு புகைப்படத்தில் இருக்கக்கூடிய கிராஸ்-ஸேர்ஸ் பிரதிபலிக்காது என்று நாசா சாதாரணமான பதிலை சொல்லி சென்றது.

போலியான பின்னணிகள்
வெளியான பெரும்பாலான புகைப்படங்களில் வெகு சில மாற்றங்களை கொண்ட ஒரே மாதிரியான பின்புறங்களை காணமுடிகிறது, ஆக ஒட்டுமொத்த மூன்று லேண்டிங் நாடகமும் ஒரே இடத்தில் புத்திசாலித்தனமாக நடத்தப்பட்டுள்ளது என்கிறது ஒரு கோட்பாடு இதெல்லாம் அமெரிக்காவில் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள முடியாத ரஷ்யா கிளப்பிவிட்ட புரளிகள் என்று எளிமையாக கூறிவிடமுடியாது ஏனெனில் அமெரிக்க வீரர்கள் நிலவிற்கு சென்றதையே 20% அமெரிக்கர்களே நம்பவில்லை, என்கிறது அங்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலவு பயணத்தின் விளைவாக இந்த எண்ணிக்கையும் அதிகரித்திருக்கலாம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நிலவில் ஏற்பட்ட சிறிய சத்தம்
அதிர்வுகளை காற்று இல்லாத இடத்தில் சப்தம் மட்டும் எப்படி கேட்டிருக்க முடியும் விண்வெளி வீரர் காலில் சுத்தியலால் அடிக்கும்போது சப்தம் ஏற்படுகிறது நிசப்தம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது, இந்த சத்தத்தை குறித்ததான சந்தேகங்களை நாசாவின் எழுப்பியபோது அதற்கு நாசா சட்டைக்குள் இருந்த மைக்ரோ போனின் அதிர்வு என்று கூறியது.

அமெரிக்காவிடம் இப்பொழுது அதைப்போல் மீண்டும் மனிதர்களை அனுப்புங்கள் என்று கூறினாள் அது வலி நிறைந்த ஒரு அனுபவம் நாங்கள் சென்று வந்த அனைத்து கோப்புகளை எல்லாம் அழித்துவிட்டோம் இனி மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை என்று நாசா கூறியது நகைப்பிற்குரியது.
இப்பொழுது ஓரியான் எனும் விண்கலத்தை நாசா உருவாக்கி வருகிறது, இந்த ‘வான் ஆலன் பெல்ட் ‘ தாண்டி உள்ளே வருவது வெளியே செல்வதோ அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, இப்பொழுது நாசா சொல்கிறது அந்தக் கடினமான பகுதிகளை தாண்டிச் செல்லும் சக்தியை ஓரியான் பெற்றிருக்கிறது என்பதை நான் இப்பொழுது கூறுகிறது, அப்படி இருக்க எப்படி 1969இல் மட்டும் சாத்தியமாகி இருக்க முடியும் இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த காந்தப்புலத்தை தாண்டி மீண்டும் வந்தது தான்.

பேராசிரியர். ரமேஷ் வீரையா

சமூக ஆர்வலர்

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!