திருச்சி ரவுடி மிட்டாய் பாபு மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்து !

0 562

திருச்சி ரவுடி மிட்டாய் பாபு மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்து !

 

திருச்சி மாநகரம், காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோடு எண்ணெய் கேட் அருகே உள்ள ஸ்ரீராம் மாட்டு தீவன கடை முன்பு 27.01.2020 அன்று காலை 0615 மணியளவில் விஜயரகு என்பவரை பாபு (எ) மிட்டாய் பாபு, தஃபெ.முகமது ஹ {சேன் என்பவர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தொடர்பாக காந்திமார்க்கெட் காவல்நிலைய குற்ற எண் 76/2020 u/s 147, 148, 341, 302, 506 (ii), 120(B) and 34 r/w

3(1) ®(s) & 3(2) (v) SC/ST POA Act 2015 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

மேற்படி வழக்கின் விசாரணையில், 30.01.2020 அன்று வழக்கின் முதல் குற்றவாளியான பாபு (எ) மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இவ்வழக்கில் பாபு (எ) மிட்டாய் பாபு என்பவர் மீது திருச்சி மாநகரத்தில் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி என காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 12 வழக்குகளும், அரியமங்கலம் காவல்நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது.

 

எனவே, மேற்படி  பாபு (எ) மிட்டாய் பாபு என்பவர் தொடர்ந்து குற்றம் சம்பவங்களில் ஈடுபடுபவர் என்பதால் மிட்டாய்பாபு காந்திமார்க்கெட் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி இன்று (20.05.2020) எதிரி பாபு (எ) மிட்டாய் பாபு என்பவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.