கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

0 641

தஞ்சாவூர் அருகேயுள்ள மானோஜிபட்டியைச் சேர்ந்த இருளர் மணி காவல்துறையினரின் பிடியிலிருந்தபோது தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை எட்டு வார காலத்திற்குள் அனுப்புமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆகிய இருவருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

மணிகண்டன் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது இறந்ததாகவும், எனவே அவரது  மரணத்துக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி பெங்களுரில் வசித்துவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்; மற்றும் வழக்கறிஞர் ஆர். சுரேஷ்பாபு என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவருக்கும் ஆணையம் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதியர்களை அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் ஜுன் 10-ம் தேதி காலை 7 மணியளவில் தஞ்சாவூர் மானோஜிபட்டி வனதுர்கா நகரைச் சேர்ந்த இருளர் மணி என்கிற மணிகண்டனை பிடிக்க முற்படுகையில் அவர் கௌதமன் என்ற காவலரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தப்பியோடியதாக கூறப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் ரெட்டிப்பாளையம் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிலிட்டவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 

காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதால,; அவர் போலீஸாரின் நடவடிக்கைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் கூறினர். ஆனால், மணிகண்டனை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல மரத்தில் தொங்கவிட்டுள்ளதாக அவரது மனைவி மலர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

 

இந்நிலையில், தற்போது பெங்களுரில் வசித்துவரும் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். சுரேஷ் பாபு என்பவர் ஜுன் 12-ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.

சம்பவத்தன்று காலை 7 மணியளவில், மணிகண்டன் அதே பகுதியில் உள்ள பரமசிவம் என்பவரது வீட்டுக்குச் சென்று அங்கே பரமசிவம் மற்றும் அவரது சகோதரியின்; கணவர் சதீஷ் குhர் ஆகியோருடன்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த கௌதமன் மற்றும் ஏழு போலீஸார் அவர்கள் மூவரையும் பிடித்தனர். இதுபற்றி கேட்ட அம் மூவரையும் போலீஸார் சாதியைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கடுமையாகத் தாக்கினர். அப்போது உதவி ஆய்வாளர் சந்திரசேகர் ஒரு கூர்மையான ஆயுதத்தால் மணிகண்டனை முதுகில் தாக்கினார். இதில் மணிகண்டனுக்கு இரத்தக் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஒருசில மணிநேரம் கழித்து ரெட்டிப்பாளையம் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிலிட்டவாறு மணிகண்டன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

 

போலீஸார் தாக்கியதிலேயே மணிகண்டன் இறந்தார். அதை மறைப்பதற்காக அவரை ஒரு மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். மணிகண்டனின் மனைவியிடம் போலீஸார் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். எனவே இதுகுறி;த்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில போலீஸ் டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அத்துடன், மணிகண்டனின் மரணத்துக்கு காரணமான அனைத்து போலீஸார் மீதும் எஸ்சிஃ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் புகார் மனுவில் வழக்கறிஞர் சுரேஷ் பாபு கூறியிருந்தார்.

 

இதையடுத்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜுன் 18-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 8 வார காலத்திற்குள் அனுப்புமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

நமது அங்குசம்.காம்-ல் இதுகுறித்து வெளியான விரிவான செய்திகளின்  அடிப்படையிலேயே தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பியதாக வழக்கறிஞர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

 

மணிகண்டனின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்வரை இவ்வழக்கை விடப்போவதில்லை  என்றும் வழக்கறிஞர் சுரேஷ் பாபு கூறினார்.

 

இந்த செய்தி குறித்து ஏற்கனவே அங்குசம் இணைதளத்தில் வெளியான செய்திகள்.

 

போலிஸ் தான் கொலைகாரர்கள் ! – கேள்விகளை அடுக்கும் மணியின் மனைவி !

 

 

கொலை – தற்கொலை – தொடரும் போராட்டம் விழிபிதுங்கும் தஞ்சை போலிஸ் !

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!