ரேஷன் கார்டு இருந்தால் ரூ 50,000 கடன் பெறலாம்

0 2,146

ரேஷன் கார்டு வைத்திருக்கும் எவர் வேண்டுமானாலும் அதை காட்டி கூட்டுறவு வங்கிகளில் ரூ 50,000 வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், முதலமைச்சர் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது என்றார்.

“ரூ50,000 வரை யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடன் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார் செல்லூர; ராஜு.

திமுக தலைவரின் ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? எனக்கேட்ட அமைச்சர், திமுக அளித்த புகார்; மனுக்களில் ரேஷன் கடை சம்பந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்றோ எந்த மனுவும் இல்லை என கூறினார்.

ஸ்டாலினின் குணம் கோணலாக உள்ளது என்றும், தமிழக மக்களிடையே முதலமைச்சர் பேருக்கு மேல் பேர் வாங்குகிறார் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறுகிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டினார்.

இக்கட்டான நேரத்தில் முதலமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், குறைகூறும் ஸ்டாலினைப்பற்றி மக்கள் தெரிந்துகொள்வார்கள் எனக்கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, “மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுள்ளனர்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!