6 கோடி செலவில் மகன் அழகை விளம்பரப்படுத்திய தந்தை !
சிறு வயது புகைப்படங்களை வைத்து விளம்பரம்
ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் தனது மகனை, மக்கள் அனைவரும் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் பருவ புகைப்படங்களை விளம்பரப்படுத்த 100 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 கோடி) செலவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த பேட்டியில், “என் மகன் குழந்தையாக இருந்த போது, மிகவும் அழகாக இருந்தான். தற்போது அவனுக்கு 16 வயது. டோக்கியோவில் உள்ள அனைவரும் இதை அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் எனது மகனின் முகங்கள் கொண்ட விளம்பரங்களை நகரம் முழுவதும் காட்சிப்படுத்தினேன். இவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கானோர் என் மகனை அடையாளம் காண்பார்கள்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இவ்வாறு செய்வது எனது மகனுக்கு பிடிக்கவில்லை என்றும் உண்மையில் நான் அழகாய் இருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் செலவு செய்த தொகையை எனது வங்கி கணக்கில் செலுத்தி இருக்கலாம் என்று அவரது மகன் கேட்டதாகவும் கூறியிருந்தார்.
குறிப்பாக இது தனது மகனின் அழகைக் கொண்டாடவும், தனது ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தவும் இந்த விளம்பரத்தை அவர் செய்ய முடிவு செய்திருக்கிறார். அதாவது அந்த சிறுவனின் புகைப்படங்கள் இப்போது அவரது தந்தையின் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் வாசகங்கள் மற்றும் லோகோக்குளுடன் இடம்பெறுகிறது. இதற்காக அந்த சிறுவனை புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞரையும் அவர் பணியமர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.