திருச்சி குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் விழாவும், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் !

0

திருச்சி விமானநிலையம் அடுத்துள்ள குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் விழாவும், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் இன்று காலை 9.00 மணியளவில் MIET பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து, பூக்களைத் தூவி, குண்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தெற்கு ஒன்றிய திமுகழகத்தின் மேனாள் செயலாளருமான எம்.மாரியப்பன் தலைமையேற்று மரியாதை செய்தார்.

குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் - இனிப்பு
குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் – இனிப்பு

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் “கலைஞர் புகழ் ஓங்கு…. கலைஞர் புகழ் ஓங்குக” என்று முழக்கமிட்டனர்.

குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் - இனிப்பு
குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் – இனிப்பு

இவ் விழாவில் குண்டூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்லதுரை, முத்துக்குமார், குமார், திருவளர்ச்சிப்பட்டி கிளைச் செயலாளர், ராஜா, இராமஜெயம், குமார், குண்டூர் கிளைக்கழகப் பொறுப்பாளர் தனபால், குண்டூர் பர்மா காலனி திமுக செயல்வீரர் வேலு உள்ளிட்ட திமுக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

குண்டூரில் கலைஞர் பிறந்தநாள்
குண்டூரில் கலைஞர் பிறந்தநாள்

பேருந்து நிலையம் அருகில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பேருந்தில் செல்லும் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

-அங்குசம் சிறப்பு செய்தியாளர்

Leave A Reply

Your email address will not be published.