சிறையிலிருந்து வெளியே வந்தவர் வெட்டிக் கொலை !

0 1,235

சிறையிலிருந்து வெளியே வந்தவர் வெட்டிக் கொலை !

கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்ட நபர் கும்பகோணம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே திருப்பந்துறை கிராமத்தில் வசித்து வந்த நாகராஜ் மகன் செல்வமணி. வயது 40. இவர் இன்று 21.0.2020 காலை கூட்டுறவு சொஸைட்டி அருகே உள்ள திடலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கே மற்றொரு கும்பலைச் சேர்ந்தவர்கள் மது அருந்தியுள்ளனர்.

இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனர்.  இந்நிலையில், மாலை 5 மணியளவில் அதே இடத்தில் செல்வமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இவர் ஏற்கெனவே கொலை வழக்கில் ஒன்றில் கைதாகி ஆயுள் கைதியாக சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தற்பொழுது நாச்சியார்கோவிலில் அவரது சித்தப்பாவின் கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பதும், கொலையாளிகள் யார் என்பதும் தெரியவில்லை.

இதுபற்றி நாச்சியார்கோவில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!