கரோனோ ஸ்பெஷல் வெட்டுக்கிளி பிரியாணி !

0 415

கரோனோ ஸ்பெஷல் வெட்டுக்கிளி பிரியாணி !

 

கரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளி தாக்குதல் தான் அடுத்த பிரச்சினையாக உருவாகும் என்ற சூழிநிலையில்;, வெட்டுக்கிளிகளின் தாக்குதலை எப்படி சமாளிப்பது என்றும் தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் விழிபிதுங்கி நிற்கையில், ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியை வைத்து பல்வேறு ‘ருசி’யான உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநில உணவகங்களில் ‘வெட்டுக்கிளி பிரியாணி,’ ‘வெட்டுக்கிளி ஃப்ரை’ ஆகியவற்றின் விற்பனை தற்போது படு ஜோராக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கூட்டடம் கூட்டமாக சென்று விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதையடுத்து வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

 

வெட்டுக்கிளிகள் விவசாயப் பயிர்களுக்கு பெரும் சவாலாக அமைவதோடு,  எதிர்காலத்தில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திவிடும் என ஐநா எச்சரிக்கைவிடுத்தது.

இச் சூழலில், ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து அதன் கால் மற்றும் இறக்கைகளை நீக்கிவிட்டு பிரியாணி, வறுவல், கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

வெட்டுக்கிளியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வெட்டுக்கிளி உணவு வகைகள் நல்ல ருசியாக இருப்பதாக ராஜஸ்தான் மக்கள் கூறுகின்றனர்.

 

சிக்கனைவிட  வெட்;டுக்கிளி அதிக புரதச் சத்து நிறைந்தது. ருசியானது என்கின்றனர்  சமையல்கலை வல்லுநர்கள். அதிக புரதச் சத்து நிறைந்திருப்பதால் வெட்டுக்கிளி உணவு வகைகள் மெக்சிகோவிலும், சீனாவிலும் மிகவும் பிரபலம்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!