அரசின் போலி இமெயிலை உருவாக்கி சைபர் தாக்குதல்

அரசு எச்சரிக்கை

0 146

இந்தியாவில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இணையதள மோசடியாளர்கள் தற்போது கோவிட் 19 விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணிக்காக அரசு நிதி உதவி மற்றும் நிவாரண உதவி பெற்றுத்தருவதுபோல் நடித்து பொதுமக்களையும், தொழில் நிறுவனங்களையும் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த இணையதள குற்றவாளிகள், தற்போது டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கோவிட் 19 பரிசோதனை செய்வதாக கூறி இமெயில் அனுப்புவார்கள். இந்த இமெயில்கள் பெரும்பாலும் அரசு நிறுவனங்கள், அதிகாரிகள் அனுப்புவது போலவே இருக்கும். மேலும் இந்த இமெயில்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளங்களுக்குள் நுழைந்து, பதிவிறக்கம் செய்வதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த மோசடி இணையதளங்கள் அச்சு அசலாக அரசின் அதிகார பூர்வ இணையதங்கள் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே பலரும் அதனை நம்பி ஏமாறலாம்.  உதாரணமாக ncov2019@gov.in என்று இருக்கலாம். மேலும் அரசு அதிகாரிகளின் முகவரிகள் போலவும் இருக்கும். ஆனால் இவற்றில் எழுத்துப்பிழைகள், தவறுகள் இருப்பதை உற்று கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும். சிறிய எழுத்து வித்தியாசத்துடன் அரசு இணையதளம் போலவே அவை அமைக்கப்பட்டிருக்கும்.  எனவே இதுபோன்ற இமெயில்கள் வந்தால் பொதுமக்கள் அந்த இணையதளங்களை திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.

ஒருவேளை அந்த இமெயில் தகவல் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் அரசின் ஒரிஜினல் இணையதளத்துக்கு சென்று சரிபார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும்.  பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி, நிதி தொடர்பான தகவல்களை வழங்க வேண்டாம் என சிஇஆர்டி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!