மேயரும் அவரே மக்களும் அவரே ! ஒரு ஊரில் ஒரு மனிதர் வாழும் நிஜம் !

0 465

ஒரு ஊரில் ஒருத்தர் வாழ்கின்ற கதை தெரியுமா !!

 

எல்ஸீ எம். ஐலர்  (Elsie M. Eiler) ) என்ற இந்த பெண்மணியின் வயது 86. அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள மோனோவி (Monowi)    என்ற ஊரில் வசித்து வருகிறார்.

இவர்தான் அந்த ஊரின்  மேயர்.  இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

இந்த ஊரில் சுமார் 5000 புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகம் உள்ளது. அந்த நூலகத்தில் இவர்தான் லைப்ரரியன். இந்த ஊரில் சுற்றுலாப்பயணிகள் சரக்கடிப்பதற்கு வசதியாக ‘‘Monowi Tavern’ என்ற ஒரு ‘பார்’ உள்ளது. அந்த ‘பாரை’ நடத்துபவரும், கஸ்டமர்களுக்கு சரக்கு ஊத்திக்கொடுக்கும் டியசவநனெநச-ம் இவர்தான்.

உங்களால் இப்போது ஏதாவது யூகிக்க முடிகிறதா? யு ஆர் அப்ஸல்யூட்லி ரைட்.

நெப்ரஸ்கா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் நையோப்ராரா நதிக்கும் மிஸெளரி நதிக்கும் இடையே அமைந்துள்ள 0.54 சதுர கி.மீ. பரப்புள்ள இந்த ஊரில் இவரைத் தவிர வேறு யாரும் இல்லை. 2010ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் வசிக்கும் ஒரே ஒரு நபர் (சிட்டிஜன்;) இவர்தான். இந்த ஒரே காரணத்திற்காக இவர் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மோனோவி என்ற இந்த சிறிய ஊர் அமெரிக்காவின் லின்ச் (Lynch) மாவட்டத்தில் சுமார் 7 மைல் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் தற்போது மூன்று வீடுகள் மட்டுமே உள்ளன. ஆனால், அங்கு குடியிருக்கும் ஒரே ஒரு ஜீவராசி இவர் மட்டுமே.

ஐலரின் தாய் ரெப்ராஸ்காவைச் சேர்ந்தவர். தந்தை ஜெர்மனியர். ஐலர் தனது பள்ளிப் படிப்பை மோனோவிலிருந்து சுமார் 7 மைல் தொலைவில் உள்ள லின்ச் நகரில் முடித்தார். அதன்பின்னர், கான்ஸாவில் உள்ள ஏர்லைன் ஸ்கூலில் பட்டப்படிப்பை முடித்த ஐலர், சிறிது காலம் ஆஸ்டின் மற்றும் டல்லாஸ் பகுதிகளில் ரிசர்வேஸன் அதிகாரியாக பணிபுரிந்தார்.

19 வயதில் அவருக்கு திருமணமானது. தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த ஜுடி (Judy)  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவரது கணவர் ஜுடி கொரியாவுடனான போரின்போது அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு அவர்களிருவரும் சில காலம் ஒமாகா  (Omaha) வில்  வசித்தனர். பின்னர், மோனோவி நகருக்கு குடிபெயர்ந்தனர். அவர்களிருவரும் சேர்ந்து அவ்வூரில் ஒரு மதுக்கடை (Pub) தொடங்கினர். தற்போது அதன் உரிமையாரும், மது ஊற்றிக் கொடுப்பவரும் இந்த 86 வயது மேயர்; ஐலர்தான்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் 1910ம் ஆண்டு 109 பேர் குடியிருந்தனர். அதிகபட்சமாக 1930ல் 123 பேர் இங்கு வசித்துள்ளனர். கால்நடை வளர்ப்பு இங்கு பிரதான தொழிலாக இருந்துள்ளது. ஆனால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் இவ்வூரைச் சேர்ந்த இளந் தலைமுறையினர் வெளியூர்களுக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டனர். அதன் விளைவாக,  இந்த ஊரின் மக்கள் தொகை 1980ல் 18 பேர்… 1990ல் 6 பேர் என படிப்படியாகக் குறைந்து 2000ம் ஆண்டு 2 பேர் ஆனது. அவர்கள் இருவரும் வேறு யாருமல்ல…. நம்ம ஐலரும், அவரது கணவர் ஜுடியும்தான்.

 

இந்நிலையில், இவரது காதல் கணவர் ஜுடி கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை நம்ம ஐலர் தனிமரமாக அதே ஊரில் வசித்து வருகிறார்.

இந்த ஊரில் 1902-ம் ஆண்டு ஒரு போஸ்ட் ஆபீஸ் தொடங்கப்பட்டு, அது கடந்த 1967ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஊரில் தற்போது 4 தெரு விளக்குகள் உள்ளன. அத் தெருவிளக்குகளை பராமரிப்பதற்கு தேவையான நிதியை மாநில அரசிடமிருந்து பெற, அந்த ஊரின் மேயர் என்ற முறையில் ஐலர் ஒவ்வோர் ஆண்டும் நகராட்சி சாலைக்கான திட்டம் தயாரித்து அனுப்பி வருகிறார்.

அவரது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் தன்னை தனியே விட்டுச் சென்றுவிட்டதற்காக ஐலர் வருத்தப்படவில்லை. மாறாக இந்த வயதிலும் தனது மதுக்கடைக்கு விடுமுறை நாட்களில் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பணிவிடை செய்து வருகிறார்.

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!