மீடியாக்களின் அராஜகம்…

0 513

மீடியாக்களின் அராஜகம்…

 

இன்று காலை 10 மணியளவில் மாநிலம் முழுவதும் திடீரென ஒரே பரபரப்பு.

அதற்கு காரணம், ஒருசில பிரபல ஆங்கில மற்றும் தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நாளிதழ்களின் வெப்சைட்டுகளில் வெளியான கீழ்க்கண்ட செய்தி :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் – திருப்புனவாசல் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த இந்திய இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறி நெருப்பு பந்துபோல பேயாடிக்கோட்டை கிராம காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.

 

இச்செய்திக்கு ஆதாரமக தினகரன் உள்ளிட்ட சில நாளிதழ்களின் வெப்சைட்டுகளில் ‘ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் காட்சி மற்றும் நெருப்பு பற்றி எரியும் காட்சிக்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

 

இச் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமலேயே அனைத்து ஊடகங்களும் படங்களுடன் செய்தி வெளியிட்டன.

 

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரின் செல்போன்களும் தொடர்;ந்து சிணுங்கிய வண்ணம் இருந்தன. இவர்கள் மட்டுமின்றி, மத்திய. மாநில உளவுத்துறை அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் அந்த ஹெலிகாப்டர் இராணுவத்துக்குச் சொந்தமானது அல்ல எனத் தெரியவந்துள்ளது. எனவே, அந்த ஹெலிகாப்டர் ஏதாவதொரு தனியார் விமான பயிற்சி பள்ளி அல்லது கிளப்புக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது.

திருப்புனவாசல் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரடியாக பார்வையிட்டு அப்பகுதியில் எந்த ஒரு விபத்தும் நடைபெறவில்லை என்றும் அது வெறும் வாந்தி என்றும் என உறுதியாக தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அடுத்தடுத்த விசாரணைகளில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி விளக்கமளித்தார். இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்தார்.

கேள்விப்பட்ட செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யாமல் அதை ஒளிபரப்பி வதந்தி கிளப்பிய மீடியாக்கள் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்படியானால், நமது மீடியாக்களில் வெளியான அந்த புகைப்படங்கள்….?

கடந்த ஜனவரி 26-ம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து ஒன்றின்; படங்கள்தான் அவை.

இவ்வளவு பெரிய உண்மையில்லாத, தவறான செய்தியை ஒளிபரப்பி  பரபரப்பை ஏற்படுத்தியதற்காக, தங்களுடைய அயோக்கியத்தனமான செயலுக்காக எந்தவொரு மீடியாவும் இன்னும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. மன்னிப்புக்கூட கேட்க வேண்டாம்…ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இது என்ன பத்திரிகை தர்மமோ?

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!