சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; – குழந்தையோடு 150 கி.மீ நடந்த சோகம்

3 292

சொந்த ஊருக்கு நடந்து செல்லும்போது

சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; –

குழந்தையோடு 150 கி.மீ நடந்த சோகம்

 

மகாராஷ்டிரத்திலிருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணி, செல்லும் வழியிலேயே சாலையோரம் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 

சாலையிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண், வெறும் 2 மணி நேரம் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு, கை;குழந்தையோடு மேலும் 150 கி;.மீ. நடந்து சென்றுள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அக் கர்ப்பிணி;யும் அவரது கணவரும் வேலை இழந்தனர். உணவு மற்றும் கையில் காசு எதுவும் இன்றி சிரமப்பட்ட அவர்களிருவரும் ஏனைய புலம்பெயர் தொழிலாளர்களுடன்  மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்னா என்ற கிராமத்துக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர். அவ்வாறு நடந்து வந்துகொண்டிருந்தபோது கடந்த செவ்வாய்க்கிழமை (மே 10) அக் கர்ப்பிணிக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையோரத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு சொந்த கிராமத்தை அடைய மேலும் 150 கி;.மீ நடந்து சென்றுள்ளார்.

 

துலே என்ற இடத்தில் அவ்வழியே வந்த ஒரு சீக்கிய குடும்பம் அக்குழந்தைக்கு துணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தந்துள்ளது.

 

இதுபற்றி தகவலறிந்த சட்னா மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து உன்செஹாரா என்ற ஊரிலிருந்த தாயையும் குழந்தையையும் மீட்டு சட்னா கொண்டுவந்தது. பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் நடைபயணமாகவே சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் ஆவர்.

 

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கினாலும், அது கையில் காசில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

3 Comments
 1. framagit.org says

  What’s up, just wanted to mention, I loved this blog post.

  It was helpful. Keep on posting!

 2. devpost.com says

  Some genuinely nice and useful information on this internet site, too I conceive the pattern has wonderful features.

 3. My relatives always say that I am killing my time here at
  web, but I know I am getting knowledge every day by
  reading thes good content.

Leave A Reply

Your email address will not be published.