மைனர் திருமணம் ! டார்ச்சர் கணவனை சிறைக்கு தள்ளிய திருச்சி சிறுமி !

0 619

சிறுமியின் தைரிய முடிவால் சிறைக்குச் சென்ற திருச்சி ஆட்டோ டிரைவர்

திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் 14 வயது சிறுமி இவர் பொன்மலைபட்டி உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கட்டாயப்படுத்தி  திடீரென திருமணம் செய்து விட்டதாக திருச்சி சைல்டுலைன் 1098 ரகசிய  தகவல் வந்திருக்கிறது.

ரகசிய தகவலை அடுத்து சைல்டு லைன் ஊழியர்கள் பொன்மலைப்பட்டி போலீசாரின் உதவியுடன் மைனர் சிறுமியை அழைத்து விசாரித்த போது எனக்கு இந்த திருமணத்தில் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் அவர் திருமணம் என்கிற பெயரில் பயங்கர டார்ச்சர் பண்ணுகிறார்.

எனது பெற்றோர்கள் வற்புறுத்தலின் காரணமாக திருமணம் நடந்தது இது குறித்து  நானே போலீசாரிடம் உதவி கேட்கலாம் என்று இருந்தேன் அதற்குள் சைல்டுலைன் தகவலறிந்து வந்தது எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

கட்டாய திருமணம் பண்ணி டார்ச்சர் செய்த  ஆட்டோ டிரைவர் வெள்ளைச்சாமி மீதுபொன்மலைப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம்  போலிசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்

திருச்சியில் சிறுமி ஒருவரின் தைரியம்
முடிவால் ஆட்டோ டிரைவர் சிறைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!