கொலைக்காகவே வாங்கிய புதிய சிம்கார்டு ! திடுக் தகவல் !

0 795

கொலைக்கு பயன்படுத்திய புதிய சிம்கார்டு ! 

 

தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகளில் ஒருவரான சகாயம் என்கிற சகாதேவன் ‘அதற்காகவே’ புதிதாக ஒரு சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளார்.

 

இக் கொலைக்கு அவரே முழு ‘சூத்திரதாரியாக’ செயல்பட்டுள்ளார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தற்போது 26 வயதுடைய சகாதேவன் ஒரு பொறியியல் பட்டதாரி. பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்துள்ள அவர் சிறிது காலம் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தினல் பணிபுரிந்துள்ளார்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரில் உள்ள யூசுப்-க்கு சொந்தமான அபார்ட்மெண்டில் உள்ள ஒரு வீட்டில் தனது பெற்றோர்களுடன் வாடகைக்கு குடியிருந்துள்ளார் சகாதேவன். அப்போது அவருக்கும் அசீலாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அசீலாவை ‘அக்கா’ என்றே சகாதேவன் அழைத்து வந்துள்ளார். இப்போதும் அக்கா என்றேதான்  தான் அழைக்கிறார்.

 

அங்கிருந்து காலி பண்ணி திருச்சிக்கு சென்றுவிட்ட பின்னரும், அக்கா மீதான பாசம் அவருக்கு துளியும் குறையவில்லை!. ‘அக்கா மீதுள்ள பாசம் காரணமாகவே யூசுப்-பை கொலை செய்ததாக’ சகாதேவன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

இக் கொலைத்திட்டத்தை நிறைவேற்றுதற்காகவே அதற்கென தனியாக ஒரு புதிய சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளார் சகாதேவன். வெளி மாவட்டத்தில் வாங்கப்பட்ட அந்த சிம் கார்டை பயன்படுத்தி நான்கு முறை மட்டுமே பேசியுள்ளார். அந்த நான்கு ‘கால்’களும் யூசுப்-பிடம்  பேசியவையே. தற்போது அந்த சிம் கார்டை போலீஸார் கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த கொலை வழக்கு சம்மந்தமாக ஏற்கனவே அங்குசம் இணைய தளத்தில் வெளியான கட்டுரைகள்  !

 

கடல் கடந்து வந்த கொலைகாரியின் காதல் பாதை !

 

 

கூலிப்படையை ஏவி  காதல் கணவரை கொலை செய்த இலங்கை பெண் ஏன் ?

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!