“மன்மத போலிஸ் விவகாரம்” தமிழக போலிஸ் டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம்  நோட்டீஸ்

0 1,373

 

தமிழக போலிஸ் டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம்  நோட்டீஸ்

 

திருவையாறு காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரை அதே காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் ஒருவர் ‘கட்டிப்பிடித்த’ சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் அனுப்புமாறு கேட்டு தமிழக போலீஸ் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களுரில் வசித்துவரும் திருச்சி மாவட்டம் லால்குடியைச்; சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ஆர். சுரேஷ் பாபு அனுப்பிய புகாரின் அடிப்படையில் தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவையாறு காவல் நிலைய மாடியில் கணினி அறையில் அப் பெண் காவலர் ஜுன் 8-ம் தேதி பிற்பகல் தனியாக பணிசெய்து கொண்டிருந்தபோது அங்கே வந்த அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் (ரைட்டர்) திடீரென கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப் பெண் காவலர் அந்த தலைமை காவலரின் பிடியிலிருந்து தப்பி மாடியிலிருந்து இறங்கி வந்து இச்சம்பவம் குறித்து காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மீது ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தால் அதிருப்தியடைந்த அப் பெண் காவலர் இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்துள்ளார். அவரது உத்தரவின் பேரில்; அந்த மன்மத தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இச் சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்புமாறு திருவையாறு போலீஸ் டிஎஸ்பி-க்கு மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார்.

இதுபற்றி நமது அங்குசம்.காம்-ல் ‘பெண் காவலரை கட்டிப்பிடித்த மன்தம போலீஸ்’ என்ற தலைப்பில் ஜுன் 20-ம் தேதி செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் வழக்கறிஞர் சுரேஷ் பாபு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஜுன் 23-ம் தேதி புகார் அனுப்பியுள்ளார்.

அவரது புகாரின் பேரில்;, இச்சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் அனுப்புமாறு தமிழக போலீஸ் டிஜிபி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அக் காலக்கெடுவுக்குள் அறிக்கையை அனுப்பாவிட்டால் தமிழக போலீஸ் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அந்த நோட்டீஸில் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!