டாஸ்மாக் வேண்டாம் – போர்க்கொடி தூக்கும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் !
திருச்சி வயலூர் ரோடு செல்வா நகர், ரங்கா நகர், வாசன் நகர் வாசன் வேலி — அமைதியான குடியிருப்பு பகுதி, கல்வியால் முன்னேறிய மக்கள், ஒற்றுமையாக வாழும் குடும்பங்கள். ஆனால், சமீபத்தில் இப்பகுதியில் புதிய மதுபானக் கடை திறக்கப்படுவதாக வந்த தகவல், மக்களின் அமைதியையும் நம்பிக்கையையும் நம்பிக்கை சீர்குலைத்துள்ளது.
மதுபானக் கடை – ஒரு சமூக நோயின் தொடக்கம். மதுபானம் இன்று சமூகத்தை ஆழமாகப் பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. மதுபானக் கடை திறப்பால், இளைஞர்கள் தவறான வழியில் செல்லும் அபாயம், குடும்பங்களில் பொருளாதார சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாடு. இந்த நிஜங்களை மனதில் கொண்டு, செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச்சங்கம் தங்கள் குரலை உயர்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, செல்வா நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் 3500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு மதுபானக் கடை திறக்கப்படுவது மக்களின் அமைதியை குலைக்கும். அரசு இந்தத் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்.” என்பதாக ஊர் பொதுமக்களின் கையெழுத்துகளோடு கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
தாங்கள் குடியிருக்கும் பகுதியில் குடி கெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடை வேண்டாம் என்று, குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் போர்க்கொடி தூக்கியிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— பிரபு பத்மநாபன்









Comments are closed, but trackbacks and pingbacks are open.