கரோனா அச்சம்; காரணமாக ‘மனுக்கள் பெட்டி’ அறிமுகம் !

0 223

 

கரோனா அச்சம்; காரணமாக
‘மனுக்கள் பெட்டி’ அறிமுகம்

ஓரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ‘பெட்டியில்’ செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓரத்தநாடு வட்டாட்சயர் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை சர்வேயருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒருசில தினங்களுக்கு முன் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் சான்றிதழ்களைப் பெறமுடியாமல் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில், பொதுமக்களின் நலன்கருதி வட்டாட்சியர் மற்றும் ஏனைய அலுவலர்கள் மட்டும் இன்று முதல் பணிபுரியத் தொடங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட்டாட்சியர் அலுவலக வாயிலில் ‘மனுக்கள் பெட்டி’ வைக்கப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் இப்பெட்டியில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பல்வேறு சான்றிதழ்கள் பெற வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை இப்பெட்டியில் செலுத்திவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அருள்ராஜ் கூறுகையில், “பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக இந்த ‘மனுக்கள் பெட்டி’ வைக்கப்பட்டுள்ளது.

இதில் தங்களது கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட வேண்டும். பின்னர், அம் மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு செல்போன் அல்லது குறுந்தகவல் மூலம் பதில் அளிக்கப்படும்,” என்றார்.
இம் மாதம் 30-ம் தேதி வரை இந்த ‘பெட்டியில் மனு செலுத்தும்’ முறை செயல்படுத்தப்படும் என்றார் வட்டாட்சியர் அருள்ராஜ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!